90 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 5000 லிட்டர் பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2026 10:04
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரத்தில் 90 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு 5000 லிட்டர் பாலாபி ஷேகம் நடந்தது. விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் குளக்கரையில் 90 அடி உயர ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு பிரமாண்ட சிலையுடன் சன்னதி உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டையொட்டி லட்சதீப விழா நடைபெறுவது வழக்கம். நேற்று நடந்த விழாவில், காலை 8:00 மணிக்கு சிறப்பு வழிபாடு துவங்கியது. 9:00 மணிக்கு அன்னதானமும், 10:00 மணிக்கு பாலபிஷேகமும் துவங்கியது. 90 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 2 மணி நேரம் 5,000 லிட்டர் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அரசமங்கலம் வெங்கடேஷ்பாபு சுவாமிகள், சிறப்பு பூஜை செய்து, பாலபிஷேகத்தை தொடங்கி வைத்தார். சிலை நிறுவனர் முன்னாள் கவுன்சிலர் தனுசு தலைமையில், பாலமணிகண்டன் உள்ளிட்ட விழாக்குழு நிர்வாகிகள், உற்சவத்தை நடத்தினர். திரளான பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.