Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமிமலை முருகன் கோவிலில் படி பூஜை: ... அலகுமலை கோவிலில் நுால் வெளியீட்டு விழா அலகுமலை கோவிலில் நுால் வெளியீட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாந்த ஆஞ்சநேயர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாந்த ஆஞ்சநேயர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2026
01:04

 பாகூர்: கன்னியக்கோவில் சாந்த ஆஞ்சநேயர் கோவிலில், 19ம் ஆண்டு லட்ச தீப திருவிழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


புதுச்சேரி – கடலுார் சாலை கன்னியக்கோவில் பச்சை வாழியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சாந்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 19ம் ஆண்டு லட்ச தீப திருவிழா நேற்று நடைபெற்றது. அதனையொட்டி, காலை 7:00 மணிக்கு சாந்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு மகா திருமஞ்சனம் செய்யப்பட்டது. காலை 9:00 மணிக்கு தட்டு வரிசை வீதியுலா நடந்தது. அதனை தொடர்ந்து, 12.00 மணிக்கு சீதா பிராட்டி சமேத ஸ்ரீராமச்சந்திரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மாலை, 6.00 மணிக்கு கோவில் வளாகம் முழுவதும் 10,008 விளக்குகள் ஏற்றி லட்ச தீப விழா நடைபெற்றது. திரளான பொது மக்கள் பங்கேற்று தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 8.00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சாந்த ஆஞ்சநேயர் வீதியுலா சென்று அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பெருமாள் (எ) மாறன், உபயதாரர்கள் செந்தில்குமார், பார்த்திபன், சின்னசாமி, செல்வராசு, அதிபதி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar