பொங்கலுார்: அலகுமலை கோவிலில், ‘தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டு திருத்தலங்கள்,’ என்னும் நுால் வெளியீட்டு விழா நடந்தது.
அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது. அதில், திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை சார்பில், ‘தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டு திருத்தலங்கள்,’ என்னும் நுால் வெளியீட்டு விழா நடந்தது. அலகுமலை திருக்கோவில் திருப்பணி குழு தலைவர் சின்னு கவுண்டர் புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை, திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் – ஐஸ்வர்யா கார்டன், ஜெகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் டிரஸ்ட் நிறுவன தலைவர் ஞானகுரு பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், நுாலாசிரியர் முரளி, ஜே.பி. டேப்ஸ் நிர்வாக இயக்குனர் கார்த்திக், கரட்டுப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சங்கீதப்பிரியா, திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை அமைப்பாளர் கொங்கு ராமகிருஷ்ணன், நிர்வாகி சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.