வாலாஜாபாத்: லிங்காபுரம், ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவில், இன்று அம்மன் பூங்கரகம் ஊர்வலம் மற்றும் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் ஊராட்சியில் உள்ளத மதுரா லிங்காபுரம் கிராமத்தில், ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், இந்தாண்டிற்கான விழா கடந்த 8ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் இறுதி நாளான இன்று காலை 6:00 மணிக்கு சிறப்பு தீபாராதணை நடந்தது. அதை தொடர்ந்து கோவில் வளாகத்தில், பெண் பக்தர்கள் ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டனர். மதியம் 12:00 மணிக்கு கலசநீர் சேகரித்து அம்மன் பூங்கரகம் ஊர்வலமும், 2:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.