Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கை ஏகாம்பரேஸ்வரர் கோவில் ... மஹாகாளி விரும்பி தங்கிய இடம் அம்பல்பாடி மஹாகாளி விரும்பி தங்கிய இடம் ...
முதல் பக்கம் » துளிகள்
செல்வ வளம் தரும் செங்கல்பட்டு அன்னை காமாட்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செல்வ வளம் தரும் செங்கல்பட்டு அன்னை காமாட்சி

பதிவு செய்த நாள்

20 ஏப்
2026
01:04

திருக்கோவில் வரலாறு: இத்திருக்கோவில் செங்கல்பட்டு என்னும் செங்கழுநீர்பட்டு என்றும் வழங்கப்படும் செங்கல்பட்டின் இதயமாக திகழும் பகுதியில் அருள்மிகு காமாட்சி அம்மையுடன் ஸ்ரீ ஏகாம்பரநாதர் அன்பர்களுக்கு அருள் வழங்கி வருகின்றார். நகரேஷ் காஞ்சி என்று மகாகவி காளிதாசன் சிறப்பித்து கூறும் காஞ்சி மாநகரில் ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது.

இக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்த பக்தர்களால் செங்கல்பட்டிலும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் செங்கல்பட்டு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மையுடன் பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். செங்கல்பட்டினை ஆண்ட விஜயநகர அரசர்கள் காலத்தில் அதாவது கி.பி.15-ம் நுாற்றாண்டில் இக்கோவில் கட்டப் பட்டிருக்க கூடும். ஆனால், கல்வெட்டு சான்றிதழ் ஏதும் இல்லாத நிலையில் இதனை அருதியிட்டு கூற இயலவில்லை.

ஏகாம்பரம் என்பது ஆமரம் அதாவது மாமரம் எனப் பொருள்படும் விதத்தில் ஏகஆமரம் ஏகாம்பரம் அதாவது ஒற்றை மாமரம் எனப்படும் விதத்தில் வழங்கப்பட்டது. சிவபெருமான் ஒற்றைமரத்தின் அடியில் காட்சியளித்த இடமாகும். செங்கல்பட்டில் தற்போது ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ள இடமும் மாவடி என்று வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கோவில் அமைப்பு கிழக்கு பார்த்த சன்னிதியில் ஏகாம்பரேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றர். கருவறையின் இருபுறமும் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் காட்சியளிக்கின்றனர். கருவறையைச் சுற்றியுள்ள தேவகோட்டத்தில், முதல் கோட்டத்தில் பால விநாயகர் திருமேனியும், அவரை அடுத்து தென்புற கடவுலான தட்சீணாமூர்த்தியும் மேற்குபுற கோட்டத்தில் விஷ்ணுவும். அவரை அடுத்து வடக்குப் புறத்தில் பிரம்மாவும், கருவறை அடுத்த அர்த்த மண்டபத்தின் வடபுற தேவகோட்டத்தில் துர்க்கையும் காட்சியளிக்கின்றனர். இத்துர்க்கையம்மனை இராகுகாலத்தில் செவ்வாய்க்கிழமை. வாரந்தோறும் பெண்கள் சிறப்பான வழிபாடு செய்கின்றனர்.

இறைவன் சன்னிதியை ஒட்டியே அம்பாள் காமாட்சியம்மையாக அருளை வாரி வழங்குகின்றார். காமாட்சி என்பதன் சொற்பொருள் பிரமனையும் என்பது திருமாலையும் என்பது ருத்திரனையும் தன் விழிகளால் தோற்றுவித்தவள், ஆதலால் காமாட்சி எனப்பட்டாள். காமாட்சி அன்பர்கள் விரும்புனவற்றை அளிப்பவரும் உயிர்களின் நன்மைக் கருத வசீகரத் தன்மையுடைய விழிகளை உடையவள் ஆக விளங்குபவள் ஆவாள். செங்கல்பட்டில் உள்ள காமாட்சியம்மன் நின்றத்திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றாள்.

பராசக்தியின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தருளிய ஒளிப்பிழம்பாகிய திரிபுரசுந்திரி வடிவம். பிரம்மதேவன் பூசித்த பங்காரு காமாட்சி திருவுருவம் மாங்காடு. காஞ்சி தஞ்சாவூர் உடையார் பாளையம் ஆகிய இடங்களில் வழிபாடு செய்யப்படுகின்றது. காஞ்சி காமாட்சியின் மனதில் நிறுத்திய பக்தர்கள் செங்கல்பட்டிலும் அவரை தரிசனம் செய்ய வேண்டி காமாட்சி அம்மனின் சன்னிதியினை அடுத்து உற்சவ விக்கிரங்கள் கண்ணாடி அறையில் பஞ்சோலகத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. கண்ணாடி அறையில் ஸ்ரீ நடராஜ பெருமான் பாங்குற சேவை செய்கின்றார். வெளி சன்னிதியில் பயிரவர் தனிமை கோலத்தில் சூரியன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வெளிபுற சுற்றில் நவகிரக சன்னிதியுடன் அரச மரத்தடி பிள்ளையாரும் வழிபாடு செய்கின்றனர். இத்திருக்கோவிலில் பிரதி தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றது.
இத்திருக்கோவில் செங்கல்பட்டு நகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அருகில் வ.உ.சி., சாலையில் அமைந்துள்ளது.

மூக்குவாய் செவி கண் உடல் ஆகி வந்து
ஆக்கும் ஐவர்தம் ஆவ்வை அவிழ்த்தருள்
நோக்குவான்தமை கோய் விளைவாரமே
காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே

என்று அடியார்களை பாடிப்பரவிய கச்சி ஏகம்பனை மனதில் நிறுத்தியே நாம் இறைவனை வணங்குவோம்.

எங்கெல்லாம் எண்னெண்ணம் செல்கின்றதோ
அங்கெல்லாம் உன்னுருவம் நிற்கட்டுமே
எங்கெல்லாம் என்சென்னி பணிகின்றதோ
அங்கெல்லாம் உன் பாதம் நிலைக்கட்டுமே

மேற்கண்ட பாடலைப் பாடிய படி பக்தர்கள் அம்பானை தரிசிக்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar