Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் கோவிலில் ... சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஜெயந்தி விழா: பஞ்ச ரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சி சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் மே 1ல் சித்திரைத் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் மே 1ல் சித்திரைத் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

25 ஏப்
2026
10:04

பெருமாநல்லுார்: -பெருமாநல்லுாரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழாஆயத்தப் பணிகள் பக்தி மணக்கத் தொடங்கின. மே மாதம் 1-ம் தேதி நடைபெறவுள்ள தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேர் அலங்கரிக்கும் பணிகளுக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக, காலை 10:00 மணிக்கு மூலவர் ஸ்ரீ உத்தமலிங்கேஸ்வரருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தேறின. 


மாலை 6:00 மணிக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க, விநாயகர் தேர் மற்றும் உத்தமலிங்கேஸ்வரர் தேர்களுக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இரவு 9:00 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் மனோகரன், அறங்காவலர்கள் சுந்தரமுத்து, திருமூர்த்தி, பானுமதி, ஜெகநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


திருவிழா நிகழ்ச்சி அட்டவணை: இன்று: காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவக்கம்.


ஏப். 29: இரவு 8:00 மணிக்கு எம்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.


ஏப். 30: இரவு திருக்கல்யாண வைபவம்.


மே 1 : மாலை 3:30 மணியளவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ முழக்கத்துடன் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.


மே 2-: இரவு 8 மணிக்கு பரிவேட்டை, சுவாமி குதிரை வாகனப் புறப்பாடு


மே 3-: காலை 9:00 சிறப்புத்தரிசனம், நடராஜர் அபிஷேகம்.


மே 4-: மஞ்சள் நீராட்டு.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், புரட்டாசி மாத உத்திர நட்சத்திர பூஜை நடந்தது.புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar