சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஜெயந்தி விழா: பஞ்ச ரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2026 11:04
புதுச்சேரி: சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஜெயந்தி விழாவையொட்டி, பஞ்ச ரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சி எல்லைபிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் நடந்தது. எல்லைபிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில், சாரதா கலா மந்திர் சார்பில், சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 51ம் ஆண்டு ஜெயந்தி விழா நேற்று முன்தினம் துவங்கி, வரும் நாளை 26ம் தேதி வரை நடக்கிறது. நேற்று 2வது நாள் நிகழ்ச்சியில், பஞ்சரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.