Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரான்மலை குயிலமுதாம்பிகை ... மானாமதுரையில் சத்குரு‌ சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா துவக்கம் மானாமதுரையில் சத்குரு‌ சதாசிவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாநல்லூரில் சித்ரா பவுர்ணமி தேர் திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெருமாநல்லூரில் சித்ரா பவுர்ணமி தேர் திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது

பதிவு செய்த நாள்

25 ஏப்
2026
04:04

திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் உள்ள புகழ்பெற்ற அருள் தரும் கோவர்த்தனாம்பிகை உடனமர் அருள்மிகு உத்தம லிங்கேஸ்வரர் திருக்கோவில் சித்ரா பவுர்ணமி தேர் திருவிழா அடுத்த மாதம் மே ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.


விழாவையொட்டி, கோவிலில் இன்று 25 ம் தேதி சனிக்கிழமை காலை கொடியேற்றம், நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் யாகம் வளர்க்கப்பட்டு, கோவர்த்தனாம்பிகை மற்றும் உத்தமலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சோமாஸ் கந்தர் தாயாருடன் சப்பரத்தில் மேளம் தாளம் முழங்க திரு வீதி உலா வந்தார். நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் குழு தலைவர் மனோகரன் மற்றும் அறங்காவலர்கள், பொது மக்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரவு 9:00 மணிக்கு மண்டப கட்டளை நிகழ்ச்சி நடைபெற்றது. 29 ம் தேதி புதன்கிழமை இரவு 8 : 00 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் காட்சியளித்தல், 30 ம் தேதி வியாழக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெறுகிறது. மே மாதம் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரண்டாம் தேதி இரவு 8:00 மணிக்கு பதிவேட்டை, சாமி குதிரை வாகனத்தில் செல்லுதல், மூன்றாம் தேதி காலை 9:00 மணிக்கு சாமி சிறப்பு தரிசனம், நடராஜர் அபிஷேகம், நான்காம் தேதி காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீருடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் மனோகரன், அறங்காவலர்கள் சுந்தர முத்து, திருமூர்த்தி, பானுமதி, ஜெகநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar