மானாமதுரையில் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2026 04:04
மானாமதுரை: மானாமதுரையில் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் 46 வது ஆண்டு ஆராதனை துவங்கியது.
கர்நாடக இசை கலைஞர்களின் குருவாக போற்றப்படும் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சந்நிதி மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு ஆராதனை விழா நடைபெறும். இன்று மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் திருமண மஹாலில் காலை 7 மணிக்கு தீபாராதனையுடன் ஆராதனை விழா தொடங்கியது.இதனைத் தொடர்ந்து ஏராளமான இசை கலைஞர்களின் வாய்ப்பாட்டு,மிருதங்கம்,வயலின்,வீணை உள்ளிட்ட கச்சேரிகள் நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு டெக்கான் மூர்த்தி, க்ளீவ்லேண்ட் சுந்தரம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் வயலின் வித்வான் வெங்கடசுப்பிரமணியன், மிருதங்க வித்வான் ரங்கநாதன் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
நாளை காலை 7:00 மணிக்கு மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் சதாசிவ பிரம்மேந்திராள் சந்நிதி அருகேபூஜை உஞ்ச விருத்தி, குரு அஞ்சலி,கோஷ்டி கானம்,விக்னேஸ்வர, வடுக, கன்யா, சுவாசினி, தம்பதி பூஜைகள் மற்றும் தீபாராதனை, ஆஞ்சநேயர் உற்சவம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திரர் ஆராதனை கமிட்டி நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். . விழாவிற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை குழுவினர் செய்து வருகின்றனர்