குன்னத்தூராம்பாளையம், அணியன் தோட்டத்தில், சுயம்பு மூர்த்தியாக அருள் பாலித்து வரும் கருப்பராயன் சாமிக்கு பல லட்சம் ரூபாய் செலவில் கோவில் கட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் துவங்கியது. பம்பை வாத்தியங்களுடன், தீர்த்த குடம், முளைப்பாரியுடன் பக்தர்கள் ஊர்வலம் நடந்தது. மாலையில் காவடியாட்டம், கருப்பராயன் ஆட்டம், குதிரை ஆட்டம், நாதஸ்வரம் மற்றும் பம்பை இசை இசைக்கப்பட்டது. இரவு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. நேற்று, அதிகாலையில் நாடி சந்தானம், மகா தீபாராதனை நடந்தது. காலை 9:40 மணிக்கு, கன்னிமார் சாமி, கருப்பராயன் சாமி, முனியப்பசாமி ஆகிய தெய்வங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. முனியப்ப சாமிக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.