Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் வரும் 30ம் தேதி நரசிம்ம ... கூடலுாரில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கூடலுாரில் பூக்குழி இறங்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயில்களில் மீனாட்சி திருக்கல்யாணம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயில்களில் மீனாட்சி திருக்கல்யாணம் விமரிசை

பதிவு செய்த நாள்

28 ஏப்
2026
04:04

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், அவனியாபுரம் கோயில்களில் மீனாட்சி அம்மன், சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது.


அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர், பால மீனாம்பிகை கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் இன்று நடந்தது. பால மீனாம்பிகை, கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண அலங்காரத்தில் எழுந்தருளினர். மாப்பிள்ளை வீட்டு பிரநிதியாக நாகசுப்பிரமணியன், பெண் வீட்டு பிரதிநிதியாக ராமசுப்பிரமணியன் திருமண சம்பிரதாயங்கள் நடத்தினர். பூஜை முடிந்து திருக்கல்யாணம் நடந்தது. பூ பல்லக்கில் பால மீனாம்பிகை, கஜ வாகனத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர், பிரியாவிடை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள் பாலித்தனர்.


திருப்பரங்குன்றம் கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மீனாட்சி அம்மன், சொக்கநாதர் முன்பு யாக பூஜை நடந்தது. சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரமாகி திருக்கல்யாணம் நடந்தது.  விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பட்டாபிஷேக ராமர் கோயிலில் இருந்து சீர் வரிசைகள் எடுத்துவரப்பட்டது. யாக பூஜை முடிந்து காசி விஸ்வநாதர், விசாலாட்சிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar