செறாடு வனதுர்க்கை அம்மன் கோவில் பிரதிஷ்டை தின விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2026 12:04
பாலக்காடு: மலம்புழா செறாடு ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் கோவிலில் பிரதிஷ்டை தின விழா இன்று நடைபெறறது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் வழிபாடுகள் நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பிரஹ்மஸ்ரீ புதுமனை மகேஸ்வரன் நம்பூதிரியின் தலைமையில் அம்மனுக்கு லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து சிறப்புப் பூஜைகள், கலசாபிஷேகம், உச்சி கால பூஜை மற்றும் சீவேலி ஆகியவை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலையில் தீபாராதனை மற்றும் சுற்றுவிளக்கு ஏற்றி வழிபடும் நிகழ்வும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஆன்மீகச் சொற்பொழிவும், லலிதா சகஸ்ரநாமப் பயிற்சியின் தொடக்க விழாவும் நடந்தது. இரவு அத்தாழப் பூஜை மற்றும் சீவேலியுடன் விழா நிறைவுபெறும்.