சாயல்குடி பத்திரகாளி அம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2026 03:05
சாயல்குடி: சாயல்குடி பத்திரகாளி அம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவம் நடந்தது. கடந்த ஏப்., 28 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இன்று மூக்கையூர் கடல் கரைக்கு சென்று பக்தர்கள் தீர்த்தமாடி புனித நீர் மற்றும் பால்குடம் அலகு குத்தி ஊர்வலமாக சாயல்குடி நகரின் வீதிகளில் மேளதாளங்கள் முழங்க வந்தனர். கோயில் முன்பு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சத்திரிய ஹிந்து நாடார் உறவின்முறை தர்ம பரிபாலன அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.