Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை ... பழநி பாலசமுத்திரம் கோட்டை காளியம்மன் கோயில் திருவிழா பழநி பாலசமுத்திரம் கோட்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சித்திரை திருவிழா நிறைவு; கள்ளழகருக்கு உற்சவ சாந்தி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை சித்திரை திருவிழா நிறைவு; கள்ளழகருக்கு உற்சவ சாந்தி பூஜை

பதிவு செய்த நாள்

06 மே
2026
06:05

மதுரை: சித்திரை திருவிழாவில் அழகர் மலைக்குத் திரும்பிய கள்ளழகருக்கு சிறப்பு உற்சவ சாந்தி பூஜைகள் நடைபெற்றது.


அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, ஏப்30ம் தேதி எதிர்சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரலாற்று சிறப்பு மிக்க அழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 1ம் தேதி நடந்தது. பின் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம், தசாவதாரம், பூப்பல்லக்கு என பல்வேறு அலங்காரங்களில் அருள் பாலித்தார். நேற்று மாலை புதூரில் இருந்து புறப்பட்டு, இரவு அப்பன் திருப்பதியில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். பின் அதிகாலை புறப்பட்டு கோயிலுக்கு சென்றார். கோயில் முன் உள்ள 18ம் படி கருப்பண சுவாமி முன் எழுந்தருளினார். அங்கு தீப ஆராதனைகள் நடந்தன. கோயிலுக்குள் வந்த கள்ளழகரை கூடியிருந்த பக்தர்கள் ""கோவிந்தா கோஷம் எழுப்பி மலர் தூவி வரவேற்றனர். பின் 18 பெண்கள் பூசணிக்காயில் சூடமேற்றி மூன்று முறை அழகரை சுற்றி திருஷ்டி கழித்தனர். தொடர்ந்து இன்று கள்ளழகருக்கு சிறப்பு உற்சவ சாந்தி பூஜைகள் நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற திருவிழாவின் போது ஏற்பட்ட களைப்பு நீங்கவும், விழாவின் போது ஏதேனும் குறைகள் ஏற்பட்டிருந்தால் அவற்றிற்குப் பரிகாரமாகவும் இந்தப் பூஜை செய்யப்படுவது குறிபடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar