Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சஞ்சீவி விநாயகர், செங்கழுநீரம்மன் ... கோவில் கலசங்கள் திருட்டு விழுப்புரம் அருகே துணிகரம் கோவில் கலசங்கள் திருட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வசந்த உத்சவம் இன்றுடன் நிறைவு: காஞ்சி வரதராஜர் குதிரை வாகனத்தில் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 வசந்த உத்சவம் இன்றுடன் நிறைவு: காஞ்சி வரதராஜர் குதிரை வாகனத்தில் உலா

பதிவு செய்த நாள்

20 மே
2026
09:05

காஞ்சிபுரம்: வசந்த உத்சவம் நிறைவு நாளான இன்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஏழு நாட்கள் நடைபெறும் வசந்த உத்சவம் கடந்த 14ம் தேதி தொடங்கியது. உத்சவத்தையொட்டி, தினமும் காலையில் கண்ணாடி அறையில் எழுந்தருளும் பெருமாளுக்கு விசேஷ பூஜை நடந்து வருகிறது.  மாலை 6:00 மணியளவில், கண்ணாடி அறையில் இருந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன், வரதராஜ பெருமாள் வெவ்வேறு மலர் அலங்காரத்தில், சன்னிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சன்னிதி வரை வீதியுலா சென்று வருகிறார்.

அங்கிருந்து புறப்பாடாகி, கோவிலில் உள்ள அத்தி வரதர் மண்டபம் என அழைக்கப்படும் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அங்கு திருவாராதனம் உள்ளிட்ட பூஜை நடந்து வருகிறது. இதில் ஆறு நாட்களும் தினமும் பல்வேறு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வசந்த உத்சவம் நிறைவு நாளான இன்று, காலை 11:00 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து வரதராஜ பெருமாள் புறப்பாடாகி வசந்த மண்டபம் வந்தடைகிறார். அங்கு சிறப்பு திருமஞ்சனமும், பக்தர்கள் பொது தரிசனமும் நடைபெறும். மாலை 6:00 மணியளவில், குதிரை வாகனத்தில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், மாட வீதிகளில் உலா வருகிறார். நிறைவாக அனந்தசரஸ் திருக்குளத்தில் தீர்த்தவாரி உத்சவம் நடக்கிறது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar