நேபாளத்தில் சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதி மகாசுவாமிகள் விஜய யாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2026 04:05
நேபாளம், ஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியர் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி மகாசுவாமிகள் நேபாளத்தில் விஜய யாத்திரை துவங்கியுள்ளார். சுவாமிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியர் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி மகாசுவாமிகள் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவான சுற்றுப்பயணம் மேற்கொள்வதுடன், ஸ்ரீ பசுபதிநாதர் மற்றும் ஸ்ரீ முக்திநாதர் ஆலயங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார். ஜகத்குரு சிருங்கேரி சங்கராச்சாரியர் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி மகாசுவாமிகள், நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் சிருங்கேரியிலிருந்து புறப்பட்டு, மதிய வேளையில் நேபாளத்தை வந்தடைந்தார். சுவாமிக்கு சிறப்பு மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று 23ம் தேதி ஜகத்குரு சங்கராச்சாரிய ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் அனைத்து உயிர்களுக்கும் அதிபதியான பசுபதிநாதரின்பரம க்ஷேத்திரமாகத் திகழும் நேபாளத்திலுள்ள பசுபதிநாதர் ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். புனிதமான பாகமதி நதிக்கரையில், தொன்றுதொட்டு வழிபடப்பட்டு வரும் பகவான் சிவபெருமானின் மிகவும் போற்றப்படும் திருத்தலங்களில் ஒன்றாக, இந்தப் பசுபதிநாதர் ஆலயம் திகழ்வது குறிபிடத்தக்கது.
22ம் தேதி முதல் முதல் 27 ம் தேதி வரை நடைபெறும் இந்த விஜய யாத்திரையை முன்னிட்டு நித்ய சந்திரமௌலீஸ்வர பூஜை மற்றும் வேத பாடசாலைகளுக்கு விஜயம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆச்சார்யாளரின் இந்த விஜய யாத்திரை மூலம் நேபாளத்தில் உள்ள அதிகமான மக்கள் பயனடைவதை உறுதிசெய்யும் வகையில், இந்திய அரசும் நேபாள அரசும், அர்ப்பணிப்புமிக்க உள்ளூர் ஏற்பாட்டாளர்கள் குழுவுடன் இணைந்து மிகச்சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.