Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாவங்களை போக்கும் மஹா கூடேஸ்வரர் சனிக்கிழமை மட்டும் திறந்திருக்கும் ஆஞ்சநேயர் கோவில் சனிக்கிழமை மட்டும் திறந்திருக்கும் ...
முதல் பக்கம் » துளிகள்
புது பொலிவுடன் மத்திய ரங்கநாதர் கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புது பொலிவுடன் மத்திய ரங்கநாதர் கோவில்

பதிவு செய்த நாள்

26 மே
2026
12:05

சாம்ராஜ்நகர் மாவட்டம், சிவனசமுத்ரா அருவி அருகே மத்திய ரங்கநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ளது. இது மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். 1,600 ஆண்டுகள் பழமையான கோவில். பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் அவதாரமாக ரங்கநாதர் காட்சியளிகிறார்.

ரங்கநாதர் சிலை மற்ற கோவில்களைப் போல முதிர்ந்த தோற்றத்தில் இல்லாமல், மிக அழகிய இளமைப் பொலிவுடன் காட்சியளிக்கிறது. இதனால் இவரை ‘மோகன ரங்கா’ என பக்தர்கள் அழைக்கின்றனர்.

காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மூன்று முக்கிய ரங்கநாதர் கோவில்களில் இது இரண்டாவதாகும். முதலாவது ஸ்ரீரங்கப்பட்டினம் ஆதிரங்கா, இரண்டாவது மத்திய ரங்கா, மூன்றாவது தமிழகம் திருச்சியில் உள்ள அந்தி ரங்கா. இந்த மூன்று கோவில்களையும் ஒரே நாளில் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனத்திற்குள் தரிசிப்பது அரிதான, மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது. இதை செய்பவர்கள் மோட்சத்துக்கு செல்வர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மத்திய ரங்கா கோவில், ஹொய்சாளர், விஜயநகர மன்னர்களால் இந்த கோவில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலில் கொரோனாவிற்கு முன்பே புனரமைப்பு பணிகள் துவங்கின. கடந்த ஐந்து ஆண்டுகளாக பணிகள் நடந்தன. 2 கோடி ரூபாய் செலவானது. இப்பணிகள் முடிந்து கடந்த 22ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தற்போது, மத்திய ரங்கநாதர் கோவில் பழமை மாறாமல் புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. சிவனசமுத்ரா அருவிக்கு செல்வோர் மத்திய ரங்கநாதரை தரிசிக்க தவற வேண்டாம். இவரிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்தால் நினைத்தது நடக்கும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar