Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தன்னலமற்ற சேவையே சமுதாயத்தை ... சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை ஶ்ரீமேதா தெட்சிணாமூர்த்தி சன்னதியில் குருபெயர்ச்சி விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை ஶ்ரீமேதா தெட்சிணாமூர்த்தி சன்னதியில் குருபெயர்ச்சி விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

26 மே
2026
04:05

மயிலாடுதுறை ; மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு குரு பெயர்ந்ததை முன்னிட்டு, மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில் குரு அனுக்கிரஹ ஸ்தலமான ஶ்ரீமேதா தெட்சிணாமூர்த்தி சன்னதியில் ஶ்ரீமேதா தெட்சினாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து, தங்ககவச அலங்காரத்தில் காட்சி, தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நவகிரகங்களில் தேவகுருவான குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்கின்றார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் புண்ணியம் அடைவதாக ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. இன்று  குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு சரியாக காலை 11.08 மணிக்கு இடம் பெயர்ந்தார். தனக்காரகன், புத்திரக்காரகன் என்று அழைக்கப்படும் குருபகவானை சிவாலயங்களில் இருக்கும் தெட்சிணாமூர்த்தி சன்னிதியில் வழிபாடு நடத்துவதன் மூலம் சிறப்பான பலன்களை அடையமுடியும். அந்த வகையில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான குரு அனுக்கிரகத் தலமான வதான்யேஸ்வரர் ஆலயத்தில் தனி சந்நதியில் எழுந்தருளியுள்ள ஶ்ரீமேதா தெட்சினாமூர்த்தி சன்னதியில் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. ஶ்ரீமேதா தெட்சினாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு தங்க கவசம் சாற்றி வழிபாடு செய்யப்பட்டது. பஞ்சமுக அர்ச்சனை, பஞ்சமுக தீபாரதனை, மகாதீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: கார்த்திகை மாதம்  மண்டல பூஜைக்காக  சபரிமலை கோவில் நடை நவம்பர் 16ம் தேதி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் 500க்கும் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar