பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் சேவை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2026 05:05
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ தீர்த்தவாரி விழாவில் குதிரை வாகனத்தில் பெருமாள் உலா வந்தார்.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் மதுரை அழகர் கோயிலுக்கு இணையாக விழாக்கள் நடக்கிறது. இதன்படி வைகாசி வசந்த உற்சவ தீர்த்தவாரி விழா மே 27 துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் கோயில் வளாகத்தில் வசந்த மண்டபத்தில் புனித நீர் நிரப்பப்பட்டது. அங்கு ஊஞ்சலில் பெருமாள் தாயார் சேவை சாதித்தனர். நான்காம் நாளான இன்று மாலை 5:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் குதிரை வாகனத்தில் அமர்ந்தார். பின்னர் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளில் வலம் வந்த அழகரை ஏராளமானவர்கள் தரிசனம் செய்தனர். நாளை காலை வசந்த மண்டபத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்து விழா நிறைவடைய உள்ளது.