Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலையம்பட்டி வேணுகோபாலசுவாமி ... புதுச்சேரி: வெண்ணெய் தாழி கோலத்தில் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு புதுச்சேரி: வெண்ணெய் தாழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனாதன தர்மத்தை மீட்டெடுக்க வந்த அவதாரம் காஞ்சி மஹா பெரியவர் இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன் பேச்சு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சனாதன தர்மத்தை மீட்டெடுக்க வந்த அவதாரம் காஞ்சி மஹா பெரியவர் இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன் பேச்சு

பதிவு செய்த நாள்

31 மே
2026
11:05

மதுரை: ‘‘சனாதன தர்மத்தை மீட்டெடுக்க வந்த அவதாரம் காஞ்சி மஹா பெரியவர்,’’ என, மதுரையில் அனுஷத்தின் அனு கிரகம் சார்பில் நடந்த அவரது 133வது ஜெயந்தி விழாவில் இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன் பேசினார்.

ஆண்டாள்புரம் வசுதாரா வளாகத்தில் ஜெயந்தி விழாவின் முதல் நாளான நேற்று அவர் பேசிய தாவது: சனாதனம் என்பது வாழ்வியல் முறை. பெண், தன் கூந்தலை தாய் வீடு, புகுந்த வீடு, தான் எனும் 3 பங்காக பிரிக்கிறாள். இரு வீடுகளையும் தன்னை கொண்டு இணைப்பதே கூந்தல் பின்னுவதன் பொருள்.

இன்று பலர் மேற் கத்திய கலாசாரப்படி தலைவிரி கோலமாக இருக்கின்றனர். மஹா பாரதத்தில் பாஞ்சாலி தன் கூந்தலை விரித்ததால் போர் மூண்டு பலர் இறந்தனர். எனவே பெண்கள் கூந்தலை பின்ன வேண்டும்.

தாமரை, வில்வ இலை, பசுவின் பின்பகுதி, யானையின் நெற்றி, சுமங்கலியின் உச்சிப்பொட்டில் மகாலட்சுமி வாசம் செய் கிறாள். எனவே ‘ஸ்டிக்கர்’ பொட்டுகளை தவிர்த்து திருமண மான பெண்கள் உச்சியிலும், ஆகாதவர்கள் புருவ மத்தியிலும் குங்குமம் இட வேண்டும்.

யோகிகள், அடியார்கள், பக்தர்களின் வாக்கினை நிறைவேற்ற கடவுள் காத்திருக்கிறார். பிறர் துன்பத்தை தன் துன்பமாக கருதுவதுடன் அனை வரிடமும் இன்சொல் பேச வேண்டும். மனிதர் களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கு உண வளிப்பதும் அன்னதானம் தான். இவற்றையே சனா தனம் வலியுறுத்துகிறது.

தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கருத்துகள் பொதிந்துள்ளன. 1960 களில் தமிழகமெங்கும் திருப்பாவை, திருவெம்பாவை மாநாடு நடத்தி தமிழ் இலக் கியங்களை மக்களிடையே கொண்டு சேர்த்த காஞ்சி மஹா பெரியவர், தமிழ் மரபு, வாழ்வியல் நெறிகளை மீட்டெடுக்க வந்த அவதாரம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவின் இரண்டாம் நாளான இன்று காலை 10:00 மணிக்கு பல்துறை சாதனையாளர்களுக்கு மஹா பெரியவர் விருது வழங்கி எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசுகிறார். மதியம் 12:00 மணிக்கு பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், ‘பெரியவர் எனும் பேர முதம்’ தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகிறார். மாலை 6:00 மணிக்கு சிறுவன் சூர்ய நாராயணனின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar