Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்காநல்லூரில் காஞ்சி மகா ...  திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி சதய திருவிழா கொடியேற்றம். திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி கோயிலில் ஆகமவிதிமீறல் எனக்கூறி திருஞானசம்பந்தர் குருபூஜையை புறக்கணித்த மதுரை ஆதினம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீனாட்சி கோயிலில் ஆகமவிதிமீறல் எனக்கூறி திருஞானசம்பந்தர் குருபூஜையை புறக்கணித்த மதுரை ஆதினம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2026
06:06

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த திருஞானசம்பந்தர் குரு பூஜையில் கருத்து மோதல் காரணமாக மதுரை ஆதினம் பங்கேற்காமல் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இக்கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவத்தின் ஒருபகுதியாக திருஞானசம்பந்தர் குரு பூஜை  நடந்தது. மதுரை ஆதின மடத்தை தோற்றுவித்தவர் என்பதால், தற்போதைய ஆதினத்தை கோயில் நிர்வாகம் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்துச்செல்வது வழக்கம். இன்று பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு பூஜை செய்து, ஆவணி மூலவீதிகள் வழியாக 63 நாயன்மார்களுடன் ஊர்வலம் நடந்தது. முன்னதாக கோயில் திருப்பணிகள் நடப்பதால் ஞானசம்பந்தர் உட்பட 63 நாயன்மார்கள் ஊர்வலம் நடப்பது ஆகமவிதி மீறல் என ஆதினம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஆனால் கோயில் நிர்வாகம் ‘ஆகம விதிமீறல் அல்ல’ என தெரிவித்ததால் கோபமடைந்த மதுரை ஆதினம்  மீனாட்சி கோயிலில் நடந்த திருஞானசம்பந்தர் குருபூஜையை புறக்கணித்தார்.

இதுகுறித்து ஆதினம் தரப்பில் கேட்டபோது ‛ திருப்பணிக்காக பாலாலயம் செய்த பிறகு சுவாமி (திருஞானசம்பந்தர்) புறப்பாடு நடக்கக்கூடாது. ஆனால் சுவாமி புறப்பாடு நடந்துள்ளது. இது ஆகமவிதிமீறல். அதனால் ஆதினம் செல்லவில்லை’ என்றனர். கோயில் தரப்பில் கூறியதாவது: பொதுவாக கோயில் பிரதான வாயிலான ராஜகோபுரம் வழியாகதான் சுவாமி புறப்பாடு நடக்கும். அந்த கோபுரத்திற்கு பாலாலயம் செய்தால் அதன் வழியாக சுவாமி புறப்பாடு நடக்கக்கூடாது என்பது ஆகமவிதி. ஆனால் மீனாட்சி கோயிலை பொறுத்தவரை சுவாமி புறப்பாடு அம்மன் சன்னதிக்கு செல்லும் அஷ்டசக்தி மண்டபம் வழியாகதான் நடக்கிறது. வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பு இது. சித்திரை திருவிழாவில் தினமும் இந்த வழியாகதான் அம்மனும், சுவாமியும் சென்று வந்தனர். சுவாமி புறப்பாடுக்காகவே இன்னும் அஷ்டசக்தி மண்டபத்திற்கு பாலாலயம் செய்யப்படவில்லை. ஆகஸ்ட் இறுதியில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar