Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ...  தண்ணாயிரமுடைய அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா தண்ணாயிரமுடைய அய்யனார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடல் வல்லான் ஆனந்த தாண்டவம் உள்ளம் குளிர பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆடல் வல்லான் ஆனந்த தாண்டவம் உள்ளம் குளிர பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2026
07:06

 திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவின் 11-வது நாளான நேற்று, ஸ்ரீநடராஜப் பெருமான் – சிவகாமசுந்தரி அம்மன் மஹாதரிசனக் காட்சி கோலாகலமாக நடந்தது.

கடந்த 30, 31-ம் தேதிகளில் தேரோட்டம் விமரிசையாக நடந்து முடிந்தது. பின் பரிவேட்டை, தெப்ப உற்சவம் எனத் திருவிழா களைகட்டிய நிலையில், நேற்று மஹாதரிசன வைபவம் அரங்கேறியது. கனகசபையில் அருள்பாலிக்கும் ஆனந்த நடராஜப் பெருமானுக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் 16 வகை திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது.

வழக்கமாக நடராஜர் திருவீதியுலா செல்லும் நாளில், சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா சென்று பக்தர்களிடம் அரிசி யாசகம் பெறுவது மரபு. நேற்று காலையில் பிச்சாண்டவர் கோலத்தில் இறைவன் உலா வந்தபோது, திரளான பக்தர்கள் அரிசி சமர்ப்பித்து பயபக்தியுடன் வழிபட்டனர். அபிஷேகங்கள் முடிந்த பின், வெள்ளி கிரீடம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி சப்பரங்களில் அம்மையப்பரும், அம்மனும் எழுந்தருளினர். கோவில் முன்புள்ள பட்டி விநாயகரை மூன்று முறை சுற்றிவந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். அவர்களுக்கு இணையாக, ஸ்ரீதேவி - பூதேவி சமேத வீரராகவப் பெருமாள், ஆதிசேஷ வாகனத்தில் ‘பாண்டியன் கொண்டை’ கிரீடம் அணிந்து ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார். அம்மையப்பருடன் இணைந்து பெருமாளும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். இன்று மஞ்சள்நீர் விழாவும், மலர்பல்லக்கு சேவையும் நடைபெற உள்ளன. நாளை விடையாற்றி உற்சவத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar