திருவொற்றியூரில் தவழும் கிருஷ்ணராக வெண்ணை தாழி அலங்காரத்தில் பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2026 04:06
திருவொற்றியூர்; திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோத்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோத்சவத்தின் எட்டாம் நாளான இன்று உற்சவர் பவள வண்ண பெருமாள், தவழும் கிருஷ்ணராக வெண்ணை தாழி அலங்காரத்தில், பல்லக்கில் எழுந்தருளி, மாடவீதி உலா வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.