பதிவு செய்த நாள்
23
ஜன
2013
11:01
ஈரோடு: ஈரோடு தங்கமேடு தம்பிக்கலையன் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. ஈரோடு அடுத்த தங்கமேட்டில், விநாயகர், அன்னபூரணி உடனமர் நீலகண்டேஸ்வரர், தம்பிக்கலையன், நாகேஸ்வரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஜனவரி, 18ம் தேதி பவானி சென்று தீர்த்தம் எடுத்து வருதலுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை, 9 மணிக்கு, இரண்டாம் காலயாகம், கோபூஜை, விஷேச சந்தி, விநாயகர் வழிபாடு, மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, தீபாராதனையும், மாலை, 5.30க்கு மூன்றாம் காலயாகம், விசேஷசந்தி, மண்டபார்ச்சனை, வேதிகார்சை, மூர்த்திஹோமம், இரவு, 8 மணிக்கு பூர்ணாஹதி, தீபாராதனை நடந்தது. இன்று அதிகாலை, 5 மணிக்கு அன்னபூரணி நீலகண்டேஸ்வரர் விமான கோபுர கும்பாபிஷேகம், காலை, 7 மணிக்கு அனைத்து பரிவார மூர்த்திக்கும் கும்பாபிஷேகம், ராஜகோபுர கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 7.30க்கு தம்பிக்கலையன் சுவாமி யாகபூஜை ஆரம்பம், த்வாரபூஜை, மூர்த்திஹோமம், சங்யா ஹோமம், நாடிசந்தனம் நடக்கிறது. காலை, 10 மணிக்கு, ராஜகோபுரம், தம்பிக்கலையன் சுவாமி விமான கோபுர கும்பாபிஷேகம், காலை, 10.30க்கு சித்தர் தம்பிக்கலையன் கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. செயல் அலுவலர் சுகுமார், தக்கார் அருள்குமார், திருப்பணிக்குழு தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.