பதிவு செய்த நாள்
23
ஜன
2013
11:01
பாவூர்சத்திரம்: அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோயில் 50ம் ஆண்டு திருவிழா 10நாட்கள் கோலாகலமாக நடந்தது.கடந்த 6ம் தேதிமுதல் 15ம் தேதி முடிய 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடந்தது. முதல்நாள் 108 வேத விற்பன்னர்கள் மகாயாகசாலை பூஜை செய்து கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. வில்லிசை, மேளம், செண்டாமேளம் நிகழ்ச்சி நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.திருவிழா காலங்களில் அம்மனுக்கு முக்கால சிறப்பு பூஜை வில்லிசை,மேளம் நடைபெற்றது.6ம் திருவிழா இரவு அம்மன் சப்பரம் மகிழ்வண்ணநாதபுரம் 7ம் நாள் பெத்தநாடார்பட்டி, பொட்டலூர்,8ம் நாள் நவநீதகிருஷ்ணபுரம்,இலங்காபுரி பட்டணம்,9ம் நாள் நாகல்குளம் சென்று திரும்பியது நிறைவுநாளில் 10 கிராம வில்லிசை குழுவினர்,3 மேள குழுவினர், இரு பாண்ட் வாத்தியம், மகுடஆட்டம், அதிசயபுரம் சுவாமி விவேகானந்தா சிவசக்திகளில் குரூப்ஸ் கணில் ஆட்டம், செண்டாமேளம், பெண்கள் கும்மியடித்தல், முளைப்பாரி, மஞ்சள்நீராடுதல் பக்தி இன்னிசை , இரவு அம்மன் சப்பரம் கோயில் வளாகத்தை சுற்றி வந்தது. வாணவேடிக்கையும் அதிகாலையில் பூக்குழி இறங்குதல் நடந்தது.நிறைவு நாளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிமற்றும் வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா சிவன்பாண்டி செய்திருந்தார்.