வாழ்வு வளம் பெற என்ன செய்யவேண்டும்: சொல்கிறார் வள்ளலார்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2026 10:06
* எண்ணம், சொல், செயலை ஒன்றாக்கு. வாழ்வு வளம் பெறும். * நல்லவர்களின் மனதை புண்படுத்தாதே. அவர்களை நடுங்கச்செய்யாதே. * பிறர் தான, தர்மம் செய்வதை தடுக்காதே. மீறி தடுத்தால் அது பாவத்திற்கு சமம். * பசித்தவருக்கு உணவு கொடு. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பாய். * எந்த உயிர்களையும் துன்புறுத்தாதே. இதுவே நீ விரதம் இருப்பதற்கு சமம். * உன்னிடம் யார் வந்து உதவி கேட்டாலும் தயங்காமல் செய். * உண்மையை பேசு. உன் மரியாதை தானாகவே உயரும். * நல்லதை உடனே செய். அதற்கான பலன் நிச்சயம் பெறுவாய். * பிறர் பொருளுக்கு ஒருபோதும் ஆசைப்படாதே. அதுதான் நல்லது. * கோபம், பொய், பொறாமை, கடுஞ்சொற்களை தவிர்த்திடு. * எதற்கும் பயப்படாதே. அதற்காக எதற்கும் பயமில்லாமல் இருக்காதே. * கடவுள் மீது நம்பிக்கை வைத்து செய்யும் செயல் வெற்றியாகும். * அன்பு, அருள், இரக்கம், கருணை, அறிவு இருந்தால் நீயும் தெய்வமாகலாம். * தினமும் கடவுளை வணங்கு. மனம் அமைதியாக இருக்கும். * பிறரிடம் உயர்வு, தாழ்வு பார்க்காமல் பழகு. * மந்திரம் சொன்னால் மட்டும் போதாது. கடவுளின் திருவடியில் உனது மனம் ஒன்ற வேண்டும்.