Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பனசங்கரி ஓம்காரேஸ்வரா கோவிலில் 12 ... மனமகிழ்ச்சி தரும் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் மனமகிழ்ச்சி தரும் மதுராந்தகம் ஏரி ...
முதல் பக்கம் » துளிகள்
நாகதோஷத்தை போக்கும் நாகேந்திர சுவாமி கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாகதோஷத்தை போக்கும் நாகேந்திர சுவாமி கோவில்

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2026
09:06

கர்நாடகாவின், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குக்கே சுப்ரமண்யா, பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் உள்ள காடி சுப்ரமண்யர் கோவில்கள், நாகதோஷத்தை நிவர்த்தி செய்யும் திருத்தலங்களாக விளங்குகின்றன. இந்த கோவில்களுக்கு, அதிகமான பக்தர்கள் வந்து, தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.

அபார சக்தி இதேபோன்று, சக்தி வாய்ந்த கோவில் பெலகாவியில் உள்ளது. இக்கோவிலை பற்றி பலருக்கும் தெரியவில்லை. பெலகாவி அருகில், தாரிஹாளா கிராமத்தில் படேகொள்ளா மடத்தில் நாகேந்திர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள கடவுள், அபார சக்தி வாய்ந்தவர்.

தென் மாவட்டங்களுக்கு குக்கே சுப்ரமண்யா கோவில் போல, வட மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற பரிகார நிவர்த்தி தலமாக இக்கோவில் விளங்குகிறது.

நாகதேவர் சிலை மீது, அரிசியை துாவி பிரார்த்தனை செய்தால், எப்படிப்பட்ட கடுமையான நாகதோஷம் இருந்தாலும், நொடிப்பொழுதில் மாயமாகும் என்பது ஐதீகம். நீண்ட நாட்களாக திருமணம் நடக்காமல் இருப்போர், குழந்தை பிறக்காமல் மனம் நொந்துள்ள தம்பதி, இங்கு வந்து அரிசி துாவி வேண்டுதல் வைத்தால், திருமணம் கைகூடும்; குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது, பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

நோய் குணமாகும் இங்கு வந்து நாகதேவரை தரிசித்தால், நோய்கள் குணமாகும். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு அவதிப்படுவோர் இங்கு வந்து வேண்டினால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

இக்கோவில் நூற்றாண்டுகள் பழமையானதாகும். கோவிலில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. இங்குள்ள மடத்தில் வாழ்ந்த ஆன்மிக தலைவர் நாகேந்திர சுவாமிகள், வெறும் மண்ணை விதைத்து, செடியாக உருவாக்கியவர். அந்த காலத்தில் அவர் வீடு வீடாக சென்று பிரசாதம் வினியோகிப்பாராம். இவரை நாகராஜனின் அவதாரம் என்றே பக்தர்கள் நம்பினர்.

சுற்றிலும் பசுமையான காட்சிகள் நிறைந்த பகுதியில் கோவில் அமைந்திருப்பது, மற்றொரு சிறப்பாகும். மனதுக்கு நிம்மதி, அமைதியை அளிக்கும் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar