முருகன் கோயில் அருகே கட்டடம்: மலேசியா அரசு அதிரடி உத்தரவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2013 05:01
கோலாலம்பூர்: மலேசியாவில் புகழ் பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ள பட்டு குகை அருகே 26 மாடி கட்டடம் கட்ட மலேசிய அரசு தடை விதித்துள்ளது. உலகிலேயே அதி உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ள இப்பகுதியில் இந்த கட்டடம் கட்டப்படுமானால், அது கோயிலையும் அங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களையும் சிரமத்திற்குள்ளாக்கும் என்று சிலாங்கூர் பகுதிவாழ் இந்து சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இது குறித்து சிலாங்கூர் முதல்வர் டான் ஸ்ரீ காலித் கூறுகையில், பட்டு குகை கோயில் அருகே இந்த கட்டடம் கட்டப்படுவதால் ஏற்படக்கூடிய சுற்றுப்புறச் சூழ்நிலை பாதிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த புதிய கட்டடம் கட்ட அனுமதி மறுப்பதென முடிவு செய்யப்பட்டது. வளர்ச்சி திட்டத்திற்காக மக்கள் பாதுகாப்பை அரசு புறக்கணிக்க முடியாது என்றார். மலேசிய அரசின் இந்த முடிவை பல்வேறு இந்து அமைப்புகள் வரவேற்றுள்ளன.