Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகே உருவான நல்லூர் கோவில் கோவிலுக்கு நிகரான திருத்தேர் தரிசனம் கோவிலுக்கு நிகரான திருத்தேர் ...
முதல் பக்கம் » துளிகள்
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்கள்!

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2026
11:06

சிவபெருமான் இயற்கையின் ஐந்து அடிப்படைக் கூறுகளான (பஞ்சபூதங்கள்) நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் ஐந்து இடங்களில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த பஞ்ச பூத தலங்களும் அதன் சிறப்புகளும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன.


* நிலம் (பூமி): காஞ்சிபுரம் - ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்

சிறப்பு: அன்னை பார்வதி தேவி மண்ணால் சிவலிங்கம் செய்து வழிபட்ட தலம். இங்குள்ள மூலவர் ‘பிருத்வி லிங்கம்’ என்று அழைக்கப்படுகிறார்.


* நீர்: திருவானைக்காவல் - ஜம்புகேஸ்வரர் திருக்கோவில்
சிறப்பு: மூலவர் லிங்கத்தின் அடிப்பகுதியில் எப்போதும் நீர் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும். இது ‘அப்பு லிங்கம்’ (நீர்) தலம் ஆகும்


* நெருப்பு (அக்னி): திருவண்ணாமலை - அருணாசலேஸ்வரர் திருக்கோவில்.

சிறப்பு: சிவபெருமானே அக்னி மலையாக (ஜோதியாக) காட்சி தரும் தலம். இது ‘அக்னி லிங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது.


* காற்று (வாயு): திருக்காளத்தி - காளத்தீஸ்வரர் திருக்கோவில்.

சிறப்பு: கருவறையில் காற்று இல்லாதபோதும், சிவலிங்கத்தின் மீதுள்ள அர்ச்சனை தீபம் எப்போதும் காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இது ‘வாயு லிங்கம்’ தலம்.


* ஆகாயம் (வெட்டவெளி): சிதம்பரம் - நடராஜர் திருக்கோவில்.

சிறப்பு: இங்கு இறைவன் உருவமற்ற ஆகாயத்தை (வெட்டவெளி) சிவனாகக் காட்டும் ‘ஆகாச லிங்க தலம்’ ஆகும். ரகசியமான ‘சிதம்பரம் ரகசியம்’ இங்குள்ளது.

புதிய திருப்பணி

அறங்காவலர் குழுவினரின் சீரிய முயற்சியால், உபயதாரர் மூலமாக. திருக்கோவில் முன்புறம் உள்ள வளாகத்தில், ‘பேவர்பிளாக்’ தரைத்தளம் அமைக்கும் பணி சிறப்பாக செய்யப்பட்டது. இராஜகோபுரம் முன்பு தோரண மண்டபம் அமைக்கும் பணி. யாகசாலை மண்டபம், தேர் கொட்டகை மற்றும் வாகன மண்டபம் போன்ற பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
திருக்கோவில் நிதியிலிருந்து திருக்கோவிலின் திருமதில் சுவர்களை அகற்றிவிட்டு புதியதாக நான்கு புறமும் கல்காரப்பணியாக கருங்கல் கொண்டு திருமதிற்சுவர் அமைக்கும் பணிகள் நடந்துள்ளன. திருத்தேர் கொட்டகை பாதுகாப்பு திருமதிற்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
திருக்கோவில் உட்புறம் (தென்வடல்) பக்தர்கள் இளைப்பாற வசதியாக சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இளைப்பாறும் மண்டபம் கட்டும் பணிக்காக மதிப்பீடுகள், திருக்கோயில் உட்புறம் (கிழமேல்) PUFF SHEET கொண்டு மேற்கூரை அமைக்கும் பணி, திருக்கோவில் மகா மண்டபத்தில் உள்ள நான்கு கிரில் கேட் கதவுகளை மாற்றி மரக்கதவுகள் கொண்டு கதவுகள் அமைக்கும் பணிகள் போன்றவைகளுக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. உரிய துறை அனுமதிகள் பெறப்பட்டுள்ளது கூடிய விரைவில் இத்திருப்பணிகளும் துவங்கப்பட உள்ளதாக, அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய திருவிழாக்கள்


ஆனி திருத்தேர் திருவிழா (பிரம்மோற்சவம்)
மகாசிவராத்திரி விழா
ஆருத்ரா தரிசன விழா
கந்த சஷ்டி திருவிழா
நவராத்திரி பண்டிகை

சிறப்பு பூஜைகள்

* வாரந்தோறும் மற்றும் மாதந்தோறும் சிறப்பு பூஜைகளும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானுக்கு சஷ்டி கிருத்திகை பூஜைகளும், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஸ்ரீ பாலமுருகன் கந்த சஷ்டி பாராயணம் குழுவினரால் சிறப்பு பாராயணம் வழிபாடு.
* சுவாமி விஸ்வநாதருக்கு ஆடல் வல்லான் அறக்கட்டளை சார்பாக, மாதந்தோறும் சிறப்பு முற்றோதல்.
* விசாலாட்சி அம்மனுக்கு, மாதம் தோறும் அமாவாசை தினத்தன்று சிறப்பு அபிஷேக பூஜை வழிபாடு.
* திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பைரவருக்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சிறப்பு அபிஷேக பூஜை.
* மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு, சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜை மற்றும் வழிபாடுகள்.

‘ராசி’களின் நந்தவனம்

கோவில் சுற்று பிரகாரத்தின் வடக்கு பகுதியில் உள்ள நிலத்தை சமன் செய்து, மாமரங்கள், தென்னை மரங்கள் இருந்த பகுதியல், புதிய நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, 12 ராசியினர் வழிபட வேண்டிய மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டு, பிரத்யேகமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேஷம் – செஞ்சந்தனம்
ரிஷபம் – அத்தி மரம்
மிதுனம் – பலாமரம்
கடகம் – புரசு மரம்
சிம்மம் – பாதிரி மரம்
கன்னி – மா மரம்
துலாம் – மகிழ மரம்
விருச்சிகம் – கருங்காலி மரம்
தனுசு – அரச மரம்
மகரம் – ஈட்டி மரம்
கும்பம் – வன்னி மரம்
மீனம் – புன்னை மரம்
ஆகிய மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன; அத்துடன் சிவன் ருத்ராட்ஷ மரக்கன்றும் நட்டு வளர்க்கப்படுகிறது.

அறங்காவலர் குழு


அதனைத் தொடர்ந்து, 2024 ஜூன் 20ம் தேதி தமிழக அரசின் சார்பாக திருக்கோவிலுக்கு அறங்காவலர் குழு புதியதாக அமைக்க உத்தரவு வரப்பட்டு, முருகேசன் தலைமையில், சிவக்குமார், ஜெகதீசன், பிரியா கனகராஜ், அன்னபூரணி என, ஐவர் கொண்ட அறங்காவலர் குழு இயங்கி வந்தது. குழு தலைவராக, முருகேசன், பதவியேற்று, பல்வேறு கோவில் பணிகளை செய்து வந்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar