Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெஞ்சமடை வாஞ்சிநாத சுவாமி ... வடலூர் சத்திய ஞான சபைக்கு புதிய கொடிமரம் வடலூர் சத்திய ஞான சபைக்கு புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சிக்கந்தர்சாவடி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; முஸ்லிம்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை சிக்கந்தர்சாவடி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; முஸ்லிம்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2026
04:07

மதுரை; சிக்கந்தர்சாவடி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் கலந்துகொண்ட முஸ்லிம்களுக்கு கோவில் சார்பில் பரிவட்டம் கட்டி கோவில் நிர்வாகம் மரியாதை செலுத்தியது. 


மதுரை, சிக்கந்தர்சாவடி கிராமம் இந்து - இஸ்லாமியர்கள் இணைந்து வாழும் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்ந்து வருகின்றது. இங்குள்ள மந்தையம்மன் கோவில், காளியம்மன், பத்ரகாளியம்மன், முனியாண்டி கோயில் உற்சவ விழா திருவிழாவின் போது  இந்துக்கள் அங்குள்ள சிக்கந்தர் தர்ஹாவிலும், இஸ்லாமியர்கள் கோவிலுக்கும் சென்றும் வழிபாடு நடத்தி சமூக நல்லிணகத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெறும். மேலும் அங்குள்ள இந்து சமூக குடும்பத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு  சிக்கந்தர் அவுலியா நினைவாக சிக்கந்தர் என்ற பெயரை சூட்டும் வழக்கமும் இருந்துவருகிறது. இந்நிலையில் சிக்கந்தர்சாவடி கிராமத்தில் ஸ்ரீகாளியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.


முன்னதாக கிராமத்தின் 7 கரைகளை சேர்ந்தவர்களுக்கு கோவில் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது கிராமத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த கரைகாரர்களுக்கு கோவில் நிர்வாகத்தில் சார்பில் பரிவட்டம் கட்டி கோவில் மரியாதை அளிக்கப்பட்டது.  கும்பாபிஷேக விழாவில் சிக்கந்தர்சாவடி பகுதியை சுற்றுவட்டார பகுதி மக்களும் பங்கேற்ற நிலையில் சிக்கந்தர்சாவடி கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக பங்கேற்று கோவிலுக்கு மாலை உள்ளிட்ட அபிஷேக பொருட்களை வழங்கினர். சமூக நல்லிணகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சிக்கந்தர்சாவடி கிராமம் தனது சமூக நல்லிணக்க அடையாளத்தை என்றென்றும் நினைவூட்டிகொண்டே இருக்கும் என கிராமத்தினர் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் 1823 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 18ஆம் தேதி வடலூர் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar