பஞ்சமாதேவி வரதராஜ பெருமாள் கோவிலிருந்து திருப்பதி திருமலை பாதயாத்திரை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2026 05:07
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி வரதராஜ பெருமாள் கோவிலிருந்து 13ஆம் ஆண்டு திருப்பதி திருமலை பாதயாத்திரை குழுவினர் புறப்பட்டனர். அதனையொட்டி, கோவிலில் இருந்து இன்று காலை 7:00 மணிக்கு, திருமலை திருப்பதிக்கு செல்லும் 60க்கும் மேற்பட்டோர் பாதயாத்திரை குழுவினர், சுவாமிக்கு பூஜை செய்து புறப்பட்டனர். பெருமாள் சுவாமி நடை பயண வாகனத்துடன், கண்ணன் ராமானுஜதாசன், துரைக்கண்ணு, சீனிவாசன் ஆகியோர் தலைமையில் பஜனை பாடியபடி சென்றனர். இக்குழுவினர் வரும் 4ம் தேதி தென்னாங்கூர் கோவில் செல்கின்றனர். 5ம் காஞ்சிபுரமும், 6ம் தேதி திருத்தணியும் சென்று வழிபடுகின்றனர். 7ம் தேதி திருப்பதி தேவஸ்தான மண்டபம் செல்கின்றனர். 8ம் தேதி திருமலையில் ஸ்ரீ சீனிவாச பெருமாளை தரிசனம் செய்கின்றனர்.