Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவலிங்கத்தை போற்றி வழிபாடு தன்னம்பிக்கையுடன் மன வலிமை தரும் தன்னம்பிக்கையுடன் மன வலிமை தரும்
முதல் பக்கம் » துளிகள்
ஆஞ்சநேயரை தொட்டு வணங்க அனுமதிக்கும் கோவில்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆஞ்சநேயரை தொட்டு வணங்க அனுமதிக்கும் கோவில்!

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2026
09:07

பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் டவுனில் ஸ்ரீ நெலத ஆஞ்சநேயா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஹனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் நெலத என்றால் பூமி அல்லது தரை என்று பொருள்படும். 1,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த ஹனுமன் விக்கிரகத்தை தோண்டி எடுத்து, அதை இங்கு நிறுவி கோவில் கட்டியதால், இக்கோவிலுக்கு நெலத ஆஞ்சநேயா என்று பெயர் வந்துள்ளது.

பெரும்பாலான கோவில்களில் கருவறைக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் இந்த கோவிலின் மிக முக்கியமான அம்சமே கருவறைக்குள் சென்று ஆஞ்சநேயரின் பாதத்தை தொட்டு வணங்க பக்தர்களுக்கு அனுமதி உண்டு. ஜாதி, மத பேதமின்றி அனைத்து பக்தர்களும் செல்லலாம்.

ஹனுமனை மனமுருகி வேண்டினால் மன உளைச்சல், பயம், சனிக்கிரக தோஷங்கள், வாழ்வில் ஏற்படும் பல தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

ஹனுமனை தவிர விநாயகர், சீதா, லட்சுமணன் சமேத ராமர் உள்ளிட்ட சுவாமிகளின் விக்கிரகங்களும் உள்ளன. ஏராளமான நாக தேவதை சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ராகு, கேது தோஷ நிவர்த்திக்காக பக்தர்கள் இங்கு வருகின்றனர். தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.

சனிக்கிழமைகள், ஹனுமன் ஜெயந்தி, ஸ்ரீராம நவமி ஆகிய சிறப்பு நாட்களில், மதிய நேரத்திலும் நடை சாத்தப்படாமல் இரவு வரை திறந்து இருக்கும். சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், காலையிலேயே சென்று வருவது நல்லது.

எப்படி செல்வது?
* மெஜஸ்டிக்கில் இருந்து தொட்டபல்லாபூர் 45 கி.மீ., துாரம்.
* மெஜஸ்டிக்கில் இருந்து 5 நிமிடத்திற்கு ஒரு முறை தொட்டபல்லாபூருக்கு பி.எம்.டி.சி., பஸ் செல்கிறது. பஸ் நம்பர் 285 எம்.
* ரயிலில் சென்றால் தொட்டபல்லாபூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar