Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனைத்து உயிர்கள் மீதும் இரக்கம் ... 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ அமரேஸ்வரர் கோவில் 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ அமரேஸ்வரர் ...
முதல் பக்கம் » துளிகள்
செய்வினை கோளாறுகளை நீக்கும் ஸ்ரீ வீரபத்ரா சுவாமி கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செய்வினை கோளாறுகளை நீக்கும் ஸ்ரீ வீரபத்ரா சுவாமி கோவில்

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2026
09:07

பெங்களூரு ரூரல் நெலமங்களா தாலுகா தேவரஒசஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ வீரபத்ரா சுவாமி கோவில். இக்கோவிலில் உள்ள கருவறையில் பத்ரகாளி அம்மன் சமேத வீரபத்ர சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 1,600 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படும் இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.ஆரம்பத்தில், முனிவர்களாலும், உள்ளூர் மக்களாலும் வழிபடப்பட்ட இயற்கையான குகை கோவிலாக இருந்துள்ளது. பிற்காலத்தில் கோபுரம், மண்டபங்கள், படிக்கட்டுகள் கட்டப்பட்டு பெரிய கோவிலாக மாற்றப்பட்டது.

தீய சக்திகளை அழித்து, தர்மத்தை காக்கும் உக்ர தெய்வமாக, உத்தண்ட வீரபத்ர சுவாமியை பக்தர்கள் வழிபடுகின்றனர். செய்வினை கோளாறுகள், பில்லி – சூனியம், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், மனதில் இருக்கும் இனம் புரியாத பயம் நீங்க இங்கு வந்து சிறப்பு பூஜை செய்தால் நல்லதே நடக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்க, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர். வீரபத்ரர், பத்ரகாளியை மனமுருகி வேண்டினால் திருமண தடை நீங்கும்; குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் திருவிழாவை ஒட்டி, வீரபத்ர சுவாமி, பத்ரகாளி அம்மனுக்கு திருமண வைபவம் நடக்கிறது. இக்கோவிலில், சிவபெருமானை அவமதித்த தட்சனின் கர்வத்தை அடக்கியதை குறிக்கும் வகையிலான வீரபத்ரர் விக்ரகம் உள்ளது. இது தவிர விநாயகர், நாகர் சிலைகளும் உள்ளன.

தினமும் காலை 6:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும்; மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.

எப்படி செல்வது?
* மெஜஸ்டிக்கில் இருந்து, 57 கி.மீ., துாரத்தில் தேவரஒசஹள்ளி கிராமம் உள்ளது.
* மெஜஸ்டிக்கில் இருந்து துமகூரு செல்லும் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் சென்று தாபஸ்பேட்டில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் கோவிலுக்கு செல்லலாம்.
* சொந்த வாகனத்தில் சென்றால் கோவில் முன் நிறுத்தும் வசதி உள்ளது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல், நெலமங்களா தாலுகா, பைரஷெட்டிஹள்ளி கிராமம் கொல்லஹள்ளி பகுதியில் பைலாஞ்சநேய சுவாமி ... மேலும்
 
temple news
துமகூரு நகரில் இருந்து, 3 கி.மீ., தொலைவில், பழமையான ஷெட்டிஹள்ளி ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar