ஐம்பத்தி ஒரு சக்தி பீடங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற நாபி (தொப்புள்) பீடம். அன்னை பார்வதியின் மிக உயர்ந்த வடிவ மான ஆதி பராசக்தியின் அம்சமாக விளங்கும் இத்தலத்தில், அம்பாள் அமர்ந்த கோலத்தில் (யோக நிலை) அருள்பாலிக்கிறாள்.
தேவியின் உடல் பாகங்கள் விழுந்த சக்தி பீடங்களில், இங்கு தேவியின் நாபி (தொப் புள்) விழுந்ததாக தந்திர சூடாமணி கூறுகிறது. காமகோடி பீடம்: ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் இக்கோவிலின் நிர்வாகத் தில் வருகிறது. காயத்ரி வடிவம்: அம்பாள் கருவறையில் காயத்ரி மந்திரத்தின் சொரூபமாக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள காயத்ரி மண் டபம் விசேஷமானது.
அன்னை காமாட்சி கையில் கரும்பு வில், பாசம், அங்குசம், மலர் அம்புகளுடன் காட்சி தருகிறார். எதிரே ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. அன்னைக்கு நடைபெறும் குங்கும அர்ச்சனை பிரசித்தி பெற்றது. அம்பாளின் கருணை பொழியும் கண்களை குறிக்கும் வகையில் "காமஅக்ஷி" (காமம்/அன்பு + அக்ஷி/கண்) என்று அழைக் கப்படுகிறது. இத்தலம் காம கோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதா சிவன் ஆகிய ஐவரை ஆசனமாக்கி யோக நிலையில் வீற்றிருக்கி றார் தேவி. சிவனை மணக்க கிளி வடிவில் பார்வதி செண்பக மரத் தடியில் தவமிருந்த தல மாகும். ஸ்ரீசக்ரத்திற்கு முதன்மை பூஜை நடை பெறுகிறது.
கோவில் முகவரி: ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோவில், காஞ்சிபுரம் - 631 502. தொலைபேசி: +91-44 2722 2609 நேரம்: காலை 5.30 - 12.00 மற்றும் மாலை 4.00 - 8.30.