குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் மூன்றாவது வார பெருந்திருவிழா; திரண்ட பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2026 02:07
சின்னமனூர்: குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது வாரமான இன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் வரலாற்று சிறப்பு பெற்றதாகும்.. சனீஸ்வர பகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சனிக்கிழமைகளில் திரு விழா நடைபெறும் . திருப்பணிகள் நடைபெறுவதால் கொடி மரம் அகற்றப்பட்டுள்ளது. எனவே திருவிழா நடைபெறவில்லை. இருந்த போதும் ஆடிமாதம் வழக்கமான உற்சாகத்துடன் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று ஆடி மாதம் 3 வது சனிக்கிழமை என்பதால் பெருந்திருவிழாவாக கொண்டாடப்படும் . ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் வரத் துவங்கினார்கள். சுரபி நதியில் தண்ணீர் வராததால், நிர்வாகம் அமைத்துள்ள ஷவர்களில் குளித்து விட்டு நேர்த்தி கடன்களை நிறைவேற்றினார்கள். பின்னர் சுவாமிக்கு நடந்த சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்றனர். கலெக்டர் வைத்தி நாதன் உள்ளிட்ட பல அரசு உயர் அதிகாரிகள் | அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.