* பெருமாளின் காலை பிடித்துக் கொள். துன்பம் தீரும். * பெருமாள் கோயிலுக்கு செல்; தொண்டு செய். * பக்தரின் மனதை புண்படுத்தாதே. * கோயில் பிரசாதத்தை சாப்பிடு. * திவ்ய பிரபந்த பாடலை பாடு. * முன்னோர் சொல்லிய புண்ணிய செயல்களை, கேள்வி கேட்காமல் செய். * கண், காது, மூக்கு, நாக்கு, உடல் ஆகிய புலன்களை கட்டுப்படுத்து. * குருநாதரின் பெருமைகளை நினைவில் கொள். * பெரியவர்களை பார்த்தால் காலில் விழு. * பகவானை வணங்குவது போல் குருநாதரை வணங்கு. * முற்பிறவியில் செய்த பாவமே துன்பமாக வருகிறது. * தினமும் பூத்த பூவை மாலையாக தொடு. பெருமாளுக்கு கொடு. * நாராயணா என்ற மந்திரத்தை எப்போதும் சொல். * கோயில் பிரகாரத்தை மெதுவாக சுற்றுவது அவசியம். * நல்ல செயல்களை தொடர்ந்து செய். புண்ணியம் சேரும். * குருவை தினமும் வணங்கு. பெருமாளின் அருள் கிடைக்கும்.