Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் கோலாகலமாக நடைபெற்ற ... திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவிலில் படுகள விழா கோலாகலம் திருவாலங்காடு பத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2026
10:07

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் நேற்று மாலை தேரோட்டம் நடந்தது.


இக்கோயிலில் ஜூலை 21ல் கொடியேற்றத்துடன் துவங்கிய 13 நாள் ஆடித்திருவிழா வருகிற ஆக.2 வரை நடக்கிறது. நாள்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, மண்டகப்படிதாரர் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான திருக்கல்யாணம் கடந்த ஜூலை 27 இரவு சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் நடந்தது. திருவிழாவின் சிறப்பு நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக காலையில் கோயில் வளாகத்தில் சுதர்ஷண ஹோமமும், மதுரை அழகர்மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சன்னதியில் இருந்து ஊர் பிரமுகர்கள் அழைத்து வர ரத்தனங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் தேரில் எழுந்தருளினார். மாலை 5:08 மணியளவில் பக்தர்கள் கரகோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கி, திண்டுக்கல் ரோடு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், திருச்சி ரோடு வழியே நகரை வலம் வந்தது. பேரூராட்சி தலைவர் நிருபாராணிகணேசன், துணைத் தலைவர் மலைச்சாமி, செயல் அலுவலர் பத்மலதா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகர செயலாளர் கணேசன், த.வெ.க., பிரமுகர் சக்திகணேசன், ஆயிரக்கணக்கில் சுற்று வட்டார பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar