விழுப்புரம் மகா காளி கோவிலில் சிறப்பு வழிபாடு ; அம்மனுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2026 08:07
விழுப்புரம்: மகா காளி அம்மன் கோவில், பவுர்ணமி பூஜையில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் அருகே கோலியனுாரில் உள்ள, மகா காளி அம்மன் கோவிலில், பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு, பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு துவங்கி, ஹோமங்கள் நடந்தன. இதனையடுத்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிறகு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.