நொய்யல் ஆறு, குளங்களில் தூய்மையை மீட்டெடுக்க வேண்டி ஆரத்தி வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2026 05:08
சூலூர்: நொயய்ல் ஆறு மற்றும் சூலூர் குளங்களில் தூய்மையை மீட்டெடுக்க வேண்டி ஆரத்தி வழிபாடு நடந்தது.
நொய்யல் ஆறு டிரஸ்ட் மற்றும் வீ தி லீடர்ஸ் அமைப்பு, விவசாயிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் சார்பில், தூய்மையான சூலூர் எனும் இலக்கை அடையும் வகையில், ஆரத்தி வழிபாடு நடந்தது. மேற்கு அங்காளம்மன் கோவிலை ஒட்டி பெரிய குளக்கரையில் ஆரத்தி வழிபாடு நடந்தது. ஏராளமானோர் குளத்துக்கு ஆரத்தி காண்பித்து வழிபட்டனர். நொய்யல் ஆறு மற்றும் பெரிய குளம், சின்ன குளம் ஆகியவற்றின் தூய்மை மீட்டெடுக்கும் வேண்டுதல் நடந்தது. முன்னதாக, கன்யா பெண்கள் பூஜை மற்றும் 27 நட்சத்திர சுமங்கலி பெண்கள் தீபம் ஏந்தி வழிபாடு நடத்தினர்.