Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே! திசைக்கொரு தெய்வங்கள்... திசைக்கொரு தெய்வங்கள்...
முதல் பக்கம் » துளிகள்
கனவில் தோன்றி வரம் அளித்த செங்கழுநீர் அம்மன் 600 ஆண்டு கால வீராம்பட்டினம் தல வரலாறு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கனவில் தோன்றி வரம் அளித்த செங்கழுநீர் அம்மன் 600 ஆண்டு கால வீராம்பட்டினம் தல வரலாறு

பதிவு செய்த நாள்

14 ஆக
2026
09:08

புதுச்சேரியின் அருள்மகுடமாக மிளிரும் வீராம் பட்டினம் ஸ்ரீ செங்கழுநீர் அம்மனின் திருக்கோவில் உருவான வரலாறும், அன்னை நிகழ்த்திய அற்புதங்களும் கேட்கக் கேட்க மெய்சிலிர்க்க வைக்கும். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வீராம்பட்டினத்தில் வீரராகவ செட்டியார் - புனிதவதி தம்பதியர் வசித்து வந்தனர். இறை பக்தியும் நன்னடத்தையும் கொண்ட செட்டியார், ஆற்றில் மீன்பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தார்.

அப்படியொரு நாள், ஊருக்கு மேற்கே உள்ள செங்கழுநீர் ஓடையில் செட்டியார் வலையை வீசினார். பலமுறை வீசியும் மீன் கிடைக்கவில்லை. இறுதியில் சிவபெருமானை வேண்டி வலையை வீசி இழுக்க, வலை மிகவும் கனமாக வந்தது. பெரிய மீன் சிக்கிவிட்டது என்ற மகிழ்ச் சியோடு வலையைப் பிரித்துப் பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அது ஒரு பெரிய மரக்கட்டை. மனமுடைந்த செட்டியார், அந்த மரக்கட்டையை வீட்டிற்குக் கொண்டு வந்து கொல்லைப் புறத்தில் போட்டார். சிலநாட்கள் கழித்து, அடுப்பெரிப்பதற்காக செட்டியாரின் மனைவி அந்த மரக்கட்டையைக் கோடாரியால் பிளக்க முயன்றார்.

அடுத்த கணம், அம்மா என அலறித் துடித்தார். கோடாரி பட்ட இடத்திலிருந்து செங்குருதி குபீரெனப் பாய்ந்து வந்தது. பதறிய ஊர்மக்கள் ஓடிவந்து இந்த அதிசயத்தைக் கண்டு வியந்தனர். தெய்வத்தின் அருளே இது என உணர்ந்த செட்டியார், கட்டையை வீட்டிற்குள் எடுத்து வந்து மஞ்சள், குங்குமம், மலர்கள் சாற்றி வழிபடத் தொடங்கினார். அன்றிரவு செட்டியாரின் கனவில் அன்னை பராசக்தி தோன்றி, என் அருள் வெள்ளத்தின் அடையாளமாகவே அந்தத் தெய்வக் கட்டை உன்னிடம் வந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சமாதியான ஒரு சித்தரின் பீடத்திற்கு அருகில், அக்கட்டையைப் பீடமாக வைத்து என் தலை உருவத்தை நிறுவி, செங்கழுநீரம்மன் என்ற பெயரில் என்னை வழிபடுங்கள் எனக் கூறி மறைந்தாள்.

விடிந்ததும் ஊர்மக்கள் திரண்டு சென்று அம்மன் சுட்டிக் காட்டிய இடத்தை அடைந்தனர். அது புதர்கள் மண்டிய இடமாக இருந்தது. இடத்தைச் சுத்தம் செய்யத் தொடங்கியபோது, அங்கிருந்த புற்றிலிருந்து ஒரு நாகம் சீறியபடி வெளியே வந்தது. பயந்து நடுங்கிய மக்கள் முன், அந்த நாகம் பலமுறை தரையில் அடித்து, ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி மீண்டும் புற்றுக்குள் சென்றது. நாகம் காட்டிய அந்த இடத்தை மக்கள் தோண்டிய போது, பூமியின் ஆழத்தில் ஓர் அற்புதச் சித்தரின் ஜீவசமாதி யின் மேல் பரப்பு தென்பட்டது. சித்தர் சமாதி கண்டெடுத்த மகிழ்ச்சியில், செட்டியாரிடம் இருந்த மரக்கட்டையைப் பீட மாக அமைத்து, அதன்மேல் அம்பாளின் தலை உருவத்தை மட்டும் விக்ரகமாகப் பிரதிஷ்டை செய்து செங்கழுநீரம்மன் எனத் திருநாமமிட்டு வழிபடத் தொடங்கினர்.

ஆரம்பத்தில் கூரைக்கோவிலில் அம்மனின் சிரசை மட்டும் வழிபட்டு வந்த மக்கள், காலப் போக்கில்பெருங்கோவில் எழுப்பி முழு உருவத்தையும் அமைக்க எண்ணினர். அதன்படி, அபூர்வ தேவதாரு மரத்தால் அம்பாளின் முழு உருவமும் செதுக்கப்பட்டது. இன்றைக்கு, 4 திருக்கரங்களில் உடுக்கை, கபாலம், வாள், கப்பரை ஆகியவற்றை ஏந்தி, அருள் பொழியும் நின்ற திருக்கோலத்தில், கடலை நேரக்கி கிழக்குத் திசை பார்த்து வீற்றிருந்து அருளாட்சி புரிகிறாள் அன்னை செங்கழுநீர் அம்மன்.

திருமணத் தடை நீக்கும் தலம்


சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப் புகளில் இடம் பெற்ற வரலாற்றுப் பெருமை கொண்ட வீராம்பட்டினம் ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் கோவில். இன்றைக்கும் திருமணத் தடை நீக்கும் வரப்பிரசாதமாக, குழந்தை பாக்கியம் அருளும் தெய்வமாக திகழ்கிறது.


57 அடி உயர ராஜகோபுரம்

இறைவி: ஸ்ரீ செங்கழுநீர் அம்மன்


கோவில் அமைவிடம்: வீராம்பட்டினம், அரியாங்குப்பம் கொம்யூன், புதுச்சேரி.


ராஜகோபுர உயரம் : 57 அடி


திருத்தேர் உயரம் : 43 அடி


தரிசன நேரம்:


காலை 6:00 மணி முதல்
மதியம் 12:00 மணி வரை
மாலை 4:00 மணி முதல்
இரவு 9:00 மணி வரை

பூஜை, அபிஷேக நேரம்


காலை 8:00 மணி
மதியம் 12:00 மணி
இரவு 7:00 மணி

கட்டணம்: 1000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை

கோவிலுக்கு செல்லும் வழி

புதுச்சேரியிலிருந்து கடலுார் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ., துாரம் பயணித்தால் அரியாங்குப்பம் வரும். அங்கிருந்து கிழக்குத் திசையில் கடற்கரையை நோக்கிச் செல்லும் சாலையில் 3 கி.மீ., பயணித்தால் வீராம்பட்டினம் கிராமத்தை அடையலாம்.

பஸ் வசதி

புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து வீராம்பட்டினத்திற்கு தொடர்ச்சியாக டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளியூர் பக்தர்கள் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து வருவோர் புதுச்சேரி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து பஸ்கள் அல்லது டாக்சி மூலம் செல்லலாம்.
கடலுார் வழியே வருவோர் புதுச்சேரி வரை செல்ல வேண்டியதில்லை அரியாங்குப்பம் நிறுத் தத்திலேயே இறங்கி, அங்கிருந்து ஆட்டோக்கள் அல்லது நகர பஸ்கள் மூலம் வீராம்பட்டினத்தை அடையலாம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 
temple news
* நல்லதைச் செய். உனக்கு நல்லதே நடக்கும். * அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதே. வாழ்நாள் முழுவதும் படி.  * ... மேலும்
 
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar