பதிவு செய்த நாள்
14
ஆக
2026
10:08
வீராம்பட்டினத்தில், செங்கழுநீர் அம்மனைத் தவிர ஊரின் 4 திசைகளிலும் எல்லை தெய்வங்களாகவும், குல தெய்வங்களாகவும் எண்ணற்ற கோவில்கள் அமைந்து கிராம மக்களைக் காத்து வருகின்றன.
காக்கையன்தோப்பு விநாயகர் கோவில்
வீராம்பட்டினத்தின் சின்ன ஓடைப் பகுதியில் அமைந் திருந்த விநாயகரை, ஊர் பஞ்சாயத்தாரும் மக்களும் கீற் றுக் கொட்டகை அமைத்து வழிபட்டு வந்தனர். காலப் போக்கில் தோப்புகள் அழிந்து வீடுகளும் சாலைகளும் வரத் தொடங்கியதும், காக்கையன்தோப்புப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து பிரம்மாண்டமாக விநாயகருக்கு கோவில் அமைத்து, நித்திய பூஜைகளுடன் வழிபட்டு வருகின்றனர்.
காவல் தெய்வம் வீரன் கோவில்
400 ஆண்டுகளுக்கும் மேலாக, தலைமுறை தலை முறையாக 100க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குல தெய்வமாக வீரன் வீற்றிருக்கிறார். மதுரை வீரன், தாழங்காட்டான், ஈஸ்வரன், முனீஸ்வரன் எனப் பல திரு நாமங்களால் அழைக்கப்படும் இந்த அய்யனுக்கு, ஆடி மாதத்தின் 3வது வெள்ளிக்கிழமைக்குப் பின் வரும் திங் கட்கிழமையில் மக்கள் திரளாகக் கூடி சிறப்புப் பூஜை செய்து வழிபடுகின்றனர்.
எல்லை காக்கும் பெரியாண்டவர் கோவில்
வீராம்பட்டினத்தின் தெற்குப் பகுதியில் முந்திரித் தோப்பு, சவுக்கு தோப்பு பகுதியில் வெட்டவெளியில் இருந்த பெரியாண்டவருக்கு, பிரான்சிலிருந்து வந்த தம்மாம் வீடு முருகையன் சிறிய கோவில் கட்டினார். அவருக்குப் பின் பொற்கலை பராமரித்த இக்கோவிலை, தற்போது ஆனந்தன் முழுமையான கோவிலாகக் கட்டி சிலை பிரதிஷ்டை செய்துள்ளார்.
பாரம்பரியம் பேசும் இருசாத்தம்மன் கோவில்
செங்கழுநீரம்மன் கோவிலின் தென்மேற்கே பவானி நகரில் உள்ளது இருசாத்தம்மன் கோவில். பல குடும்பங் களுக்கு குலதெய்வம். தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகள் எது வாக இருந்தாலும், இருசாத்தம்மனை வழிபட்ட பிறகே தொடங்குகின்றனர்.
கடற்கரையோர சவுக்குத் தோப்பில் பச்சைக்கொடி பறக்க அமைந்திருந்த நாகூரார் தோட்டம், மீனவ மக்க ளின் பெரும் நம்பிக்கை ஸ்தலம். ஆழ்கடலுக்கு கோலா மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், அல்லாவே நீயே துணை என வேண்டிக்கொண்டு பொரி, அவல், கடலை படைத்து வழிபட்டுச் செல்வர். தற்போது அப்பகுதி யில் இஸ்லாமியர்கள் அழகான மசூதி கட்டி தொழுகை நடத்தி வருகின்றனர். இதன் தெற்கே தில்லை நாச்சியம் மன் கோவிலும் அமைந்துள்ளது.
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் உயர்நிலைப் பள்ளி அருகே, முற்காலத்தில் முந்திரி தோப்புக்குள் அமைந்தி ருந்த லிங்கத்தைச் சுற்றி நாகம் குடிகொண்டிருந்தது. பிர மசிவம் என்ற முனிசாமி தன் சொந்த செலவில் இக்கோ விலைக் கட்டி, நாகலிங்கேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளார்.
செங்கழுநீரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறா மல் தரிசிக்கும் ஸ்தலம் இது. பழமைவாய்ந்த இக்கோவி லில்தான், கார்த்திகை மாதத்தில் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து, இருமுடி கட்டி தங்களின் விரதத்தைத் தொடங்குகிறார்கள்.
வடக்கை காக்கும் முனீஸ்வரர்
ஊரின் வடக்கே அரசு சமுதாய கூடம் அருகே பழனி, தணிகைவேல் ஆகியோரால் முனீஸ்வரன் கோவில் கட் டப்பட்டுப் பூஜை நடக்கிறது. மேலும், பனைமரத்தின் கீழ் செங்கல் வைத்து வழிப்பட்ட வடக்குப் பகுதி பெரி யாண்டவருக்கு, ஆடி மாதம் 3வது வெள்ளியில் விமர் சையாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
தெற்கே கடற்கரையோர சவுக்குத் தோப்பில் அமைந்தி ருக்கும் பிச்சைவரத்தான் கோவில், குப்புசாமி நாட்டாரின் குலதெய்வத் தலமாகும். செங்கழுநீர் அம்மன் தேவஸ்தா னத்தின் பழங்கால பூசாரிகளான இவர்களின் பரம்பரை, ஒவ்வொரு திங்கட்கிழமையும் குடும்பத்தோடு வந்து பொங்கலிட்டு வழிபடுகின்றனர்."