* பெரியாழ்வார் தமது திருப்புதல்வியான ஆண்டாள் நாச்சியாருக்கு கோதை என்று தான் பெயர் சூட்டினார். ஆண்டாள் என்று எங்கும் அவர் குறிப்பிடவில்லை. அதுபோல ஆண்டாள் நாச்சியாரும் தன்னை ஆண்டாள் என்று எங்கும் சொல்லிக் கொள்ளவில்லை. * சுரும்பார் குழல்கோதை (நாச்சியார் திருமொழி) என்றும், பட்டர்பிரான் கோதை (திருப்பாவை) என்றும் தான் அடையாளப்படுத்திக் கொள்கிறாள். அப்படியானால் ஆண்டாள் என்ற பிரபலமான திருப்பெயரை சூட்டியது யார். நாதமுனிகளின் சீடரான ஸ்ரீ உய்யக்கொண்டார் திருப்பாவைக்கு எழுதிய தனியின் ஸ்லோகத்தில் முதன் முதலாக ஆண்டாள் என்று உச்சரிக்கிறார். * அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்கு பன்னு திருப்பாவை பல் பதியம்- இன்னிசையால் பாடி கொடுத்தான் நற்பாமாலை; பூமாலை சூடிக்கொடுத்தாளை சொல்லு என்கிறார். இங்கே தான் முதன் முதலில் ஆண்டாள் என்ற பெயர் வருகிறது.
ஊஞ்சலில் ஆண்டாள்
ஆண்டாள் சன்னதி அர்த்தமண்டபத்தில் வெள்ளிக்குறடு எனும் மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மாலை 6:௦௦ மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருடன் ஊஞ்சலில் எழுந்தருள்கிறாள். இந்நேரத்தில் ஆண்டாளை தரிசனம் செய்தால், திருமண பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.