Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டாளுக்கு பெயர் வைத்தவர் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் ...
முதல் பக்கம் » துளிகள்
தொன்மையும் சிறப்பும் வாய்ந்த ஆண்டாள் கோயில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தொன்மையும் சிறப்பும் வாய்ந்த  ஆண்டாள் கோயில்

பதிவு செய்த நாள்

14 ஆக
2026
11:08

108 திவ்ய தேசங்களில் மங்கள சாசனம் செய்யப்பட்டுள்ள திருத்தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற வைணவ திருத்தலங்களுக்கு இணையாக போற்றப்படுவது ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில்.


ஆண்டாளின் திருப்பாவை இல்லாமல் எந்த ஒரு திவ்ய தேசத்திலும் பூஜைகள் நடைபெறுவது கிடையாது. எல்லாவற்றிற்கும் ஆண்டாள் முதன்மை பெற்று, பெருமாளுக்கு இணையான அந்தஸ்து பெற்று இருப்பதும், தேரோட்டத்தில் ரெங்கமன்னாருடன் பவனி வருவது காண முடியாத  வைபவம்.


தமிழ்நாடு அரசு ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தை இலச்சினையாக கொண்டிருப்பதும்,  பெரிய பெருமாள் என்னும் வடபத்ரசயனர் பெருமாளாக எழுந்தருள்வதும்,  ஆழ்வார் பெருமக்களில் நாராயணனுக்கு பல்லாண்டு பாசுரம் பாடிய பெரியாழ்வார் என்று போற்றப்படும் விஷ்ணு சித்தர் திருவாய்மொழி இயற்றியதும், பெரியகுளம் என்று அழைக்கப்படும் திருமுக்குளம் அமைக்கப்பட்டு இருப்பதும் இத்திருத்தலத்தின் தனி சிறப்பு்.
2000ல் நடந்த கோயில் மகா கும்பாபிஷேகத்தை அதன் கமிட்டி தலைவராக இருந்த எனது தந்தை ராமசுப்பிரமணிய ராஜா நடத்தி முடித்தார்.  2015ல் வடபத்ர சயனர் கோயில் கும்பாபிஷேகம்,  நாச்சியார் சாரிட்டி டிரஸ்ட் மூலமாக பக்தர்களின் நன்கொடையால் தங்க விமானம் செய்து அதை 2016ல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறச் செய்தார்.


எங்களது ராம்கோ சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் கோயிலுக்கும், திருத்தேருக்கும்,  யானை ஜெயமால்யதாவிற்கும், பக்தர்களுக்கும் பல்வேறு நலப்பணிகள் செய்யும் பாக்கியத்தை எங்களுக்கு ஆண்டாள் தாயார் வழங்கியதை எண்ணி பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.


சிறப்பு மிக்க ஆடிப்பூரத் திருவிழாவில் பக்த கோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்று ஆண்டாள்  திருவருள் பெற்று வாழ்வில் எல்லா வளமும் பெருக.


பிரார்த்தனைகள் நிறைவேறும்


நந்தவனத்தில் ஒருநாள் ஆண்டாள் நளவருடம், ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை, பூர நட்சத்திரத்தன்று மகாலட்சுமியின் அம்சத்துடன் நந்தவனத்தில் அவதரித்தாள். இவள் பிறந்த ஆடி பூரத்தன்று தனியே நந்தவனத்திற்கு எழுந்தருள்கிறாள்.
அப்போது அவள் பாடிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படுகிறது. கணவன் வீட்டில் எவ்வளவு மகிழ்ச்சி கிடைத்தாலும், பிறந்த வீட்டிற்கு செல்லும்பெண் கூடுதலான மகிழ்ச்சியுடன் இருப்பாள். அதேபோல, ஆண்டாள் பிறந்தவீட்டிற்கு செல்லும் நாளில் அவளை வழிபட அனைத்து நியாயமான பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பர்.

மாதவிப்பந்தல்


ஆண்டாள் சன்னதிக்கு முன்புறத்தில் மாதவிப்பந்தல் உள்ளது. பெரியாழ்வாரிடம் வளர்ந்த ஆண்டாள், இந்த  பந்தலுக்கு கீழ்தான் வளர்ந்தாளாம். இப்பந்தல் கேரள  பாணியில் முழுவதும் மரங்களால் செய்யப்பட்டதாகும்.


திருப்பாவையில் 10 பாசுரங்களில் (வாரணமாயிரம்) ஆண்டாள், தன்னை கோபிகையாக பாவித்து, கண்ணனை வேண்டி பாடிய சிற்பங்கள் இந்த பந்தலுக்கு அருகில் விதான சுவரில் உள்ளது. இதேபோல திருப்பாவை காட்சிகளை ஆண்டாள் கோயில் முன்மண்டபத்தில் ஓவியங்களாகவும் காணலாம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
விஷ்ணுபதி புண்ணிய காலமான இன்று படித்தால் நன்மை பெருகும்.ஓம் அன்பின் சுடரே போற்றிஓம் அளவிலா அறமே ... மேலும்
 
temple news
* எல்லாம் நன்மைக்கே. எதைக் கண்டும் கலங்காதே.  * நிம்மதியைத் தேடி அலையாதே. அது உன் மனதில்தான் உள்ளது. * ... மேலும்
 
temple news
* வீணாக பேசாதே. கடவுளின் பெயரைச் சொல்.  * மனிதனின் பிறவி குணம் எப்போதும் மாறாது.  * தர்மத்தின் ... மேலும்
 
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar