Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் திருத்தளிநாதர் ... மாதப்பிறப்பு, சஷ்டி விரதம்: பெருமாள், முருகனை வழிபட வெற்றி தேடி வரும்! மாதப்பிறப்பு, சஷ்டி விரதம்: பெருமாள், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகமே மாயை என்பது சரியல்ல பிறந்தநாள் விழாவில் சிருங்கேரி சந்நிதானம் அருளுரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலகமே மாயை என்பது சரியல்ல பிறந்தநாள் விழாவில் சிருங்கேரி சந்நிதானம் அருளுரை

பதிவு செய்த நாள்

18 ஆக
2026
09:08

சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சந்நிதானத்தின், 34 வது வர்த்தந்தி (பிறந்தநாள்) சிருங்கேரியில் நேற்று கொண்டாடப்பட்டது. மடத்தின் முதன்மை செயல் அதிகாரி முரளி, ஸ்ரீமடத்தின் அனேக சேவைகளை குறிப்பிட்டு உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து, சுவாமிகள் வழங்கிய அருளுரை: சனாதன தர்ம வைதிக மார்க்கத்தினை காப்பாற்றுவதற்காக அவதரித்தவர் ஆதி சங்கரர். அவரை எப்போதும் நினைவில் கொள்வதும், அவருடைய போதனைகளை கடைப்பிடிப்பதும் ஒவ்வொருவரின் கடமை. அதன் வாயிலாக நமது பிறவி அர்த்தமுள்ளதாகிறதும் குரு மற்றும் இறைவனின் கருணைக்கு பாத்திரமாகிறோம்.

நன்றாக வேதாந்தத்தினை படித்திருந்தாலும், வைராக்கியம் கைகூடுவதும், அதனை வாழ்க்கையில் செயல்படுத்துவதும் என்பது சிலரால் தான் மட்டுமே முடிகிறது என்பதன் காரணம் மாயையே ஆகும். அதனின்று வெளிவருவதற்கு இறைவன் மற்றும் குருவின் அனுக்ரஹம் தேவை. இதைத்தான் பஜகோவிந்தத்தில் ஆதி சங்கரர் கூறுகிறார்.

ஆதிசங்கரரின் உயர்ந்த கொள்கையான பிரம்ம சத்யம், ஜகன் (உலகம்) மித்யா (மாயை) என்பதனை சரியாக புரிந்து கொள்வது அவசியம். அதாவது, உலகம் என்பதில் காணப்படும் அனைத்தும் மாற்றத்துக்கு உடபடுவதால் அதன் தோற்றங்கள் மாயை. மாறாத நிரந்தரமான பிரம்மம் மட்டுமே உண்மை என்பதே இதன் சரியான விளக்கம். மாயை என்பது இல்லாதது என்பது அர்த்தமல்ல. நாம் பார்ப்பதெல்லாம் மாறக்கூடியது என்பதால் தோற்றமே மாயை. உலகமே மாயை என்பது சரியல்ல.

நம் நாட்டில் இருப்பது உயர்ந்த சனாதன தர்மம். இந்த தர்மம் ஏதோ ஒருவரால் செய்யப்பட்டது அல்ல. அது அனாதி யாகும். நாம் கடைப்பிடிக்கும் தர்ம பரம்பரை உலகம் தோன்றிய முதல் இருக்கும் ஒரு உன்னத மார்க்கமாகும்.

வேதங்களும், உப நிஷதங்களும், புராணங்களும் தெளிவாக கூறும் அத்வைத தத்துவத்தினை பிரசாரம் செய்து வலுப்படுத்த சாட்சாத் ஈஸ்வரனே எடுத்த அவதாரம்தான் ஆதி சங்கரரின் அவதாரம். அவ்வுயர்ந்த தத்துவத்தினை பிரசாரம் செய்வதற்காக ஏற்படுத்திய இந்தியாவின் நான்கு திசைகளில் நான்கு ஆம்நாய பீடங்களை நிறுவினார்.

தென்திசைக்கான ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீசாரதாம்பிகையினையும் ஸ்தாபித்து அனுக்ரஹித்தார்.

இப்பீடத்தின் குரு வாக்கியத்தினை வேதவாக்கியமாகக் கொண்டு வாழ்க்கையினை நடத்திவரும் சிஷ்யர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் ஆசீர்வாதங்கள்.

இவ்வாறு சுவாமி அருளுரை வழங்கினார்.

முன்னதாக, சுவாமிக்கு, ராமேஸ்வரம், மூகாம்பிகை, திருப்பதி, கோகர்ணம், திருச்செந்துார் உட்பட கோவில்களின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar