Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  கோவை கொடிசியா இஸ்கான் கோயிலில் ... ‘நால்வரின் திருவாக்குகளே நமக்கு ஆதாரம்’; சொற்பொழிவாளர் மதுசூதன ‘நால்வரின் திருவாக்குகளே நமக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதிதாக கோவில்களுக்கு யானை வாங்க விதித்த தடை உத்தரவு ரத்து
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புதிதாக கோவில்களுக்கு யானை வாங்க விதித்த தடை உத்தரவு ரத்து

பதிவு செய்த நாள்

03 செப்
2026
11:09

சென்னை: ‘புதிதாக கோவில்களுக்கு யானைகள் வாங்கக்கூடாது’ என, தமிழக அரசுக்கு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


‘தமிழகம் முழுதும் உள்ள கோவில்கள் மற்றும் தனிநபர்களிடம் உள்ள யானைகளை, அரசு யானைகள் மறுவாழ்வு முகாம்களுக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்க வேண்டும். புதிதாக கோவில்களுக்கு யானைகள் வாங்கக்கூடாது’ என, 2023ல், சென்னை உயர் நீதிமன்ற அமர்வின் தனி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலர், திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவில் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டது. 


இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:  தமிழ்நாடு வளர்ப்பு யானை பராமரிப்பு விதிகளுக்கு முரணாக, யானை ஒன்றின் உடல்நிலை தொடர்பான வழக்கில், இதில் சம்பந்தப்படாத பிற கோவில்கள் மற்றும் அறநிலையத்துறை தரப்பை கேட்காமல், ஒட்டு மொத்தமாக, மாநிலம் முழுதும் உள்ள கோவில் யானைகளை, மறுவாழ்வு முகாம்களுக்கு மாற்றுவது குறித்து, முடிவெடுக்கும்படி உத்தரவிட முடியாது. அதேபோல், கோவில்களில் புதிதாக யானை வாங்கக்கூடாது என்பதும் சட்டப்படி செல்லாது என்பதால், தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: கார்த்திகை மாதம்  மண்டல பூஜைக்காக  சபரிமலை கோவில் நடை நவம்பர் 16ம் தேதி ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் 500க்கும் ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் நடந்த, புத்தரி பூஜைக்காக கேரளா மாநிலம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar