உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் இன்று திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன. பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், செயல் அலுவலர் மல்லிகா மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர். இதில், மாரியம்மன் கோவிலில் உள்ள நிரந்தர உண்டியல்களில், 5 லட்சத்து, 93 ஆயிரத்து, 316 ரூபாய் மற்றும் 20.09 கிராம் தங்கம், 110.800 கிராம், வெள்ளி இனங்கள் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். அதே போல், உப கோவிலான காளியம்மன் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில், 36 ஆயிரத்து, 819 ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.