Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 3664 அடி உயரத்தில் மல்லேஸ்வரா சுவாமி ... நிம்மதியாக வாழ வழி சொல்கிறார் காஞ்சி மஹாபெரியவர் நிம்மதியாக வாழ வழி சொல்கிறார் ...
முதல் பக்கம் » துளிகள்
தோஷங்களை போக்கும் தொம்மலுார் சூரிய நாராயணர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தோஷங்களை போக்கும் தொம்மலுார் சூரிய நாராயணர்

பதிவு செய்த நாள்

06 அக்
2026
01:10

இந்தியாவில் சூரிய பகவானுக்கு சில இடங்களில் மட்டுமே கோவில் உள்ளது. இதில் பெங்களூரு தொம்மலுாரில் உள்ள சூரிய நாராயணர் கோவிலும் ஒன்றாகும். இது, பக்தர்களை வெகுவாக ஈர்க்கிறது.

பெங்களூரின் தொம்மலுாரின் கிருஷ்ண ரெட்டி காலனியில் சூரிய நாராயணர் கோவில் உள்ளது. சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அற்புதமான, அழகான கோவிலாகும். கடந்த 1995ல் படேல் கிருஷ்ண ரெட்டி, இக்கோவிலை கட்டினார். துமகூரின் சித்தகங்கா மடத்தின் சிவகுமார சுவாமிகள், கோவிலை திறந்து வைத்தார்.

கோவில் முழுதும் கிரானைட் கற்களால் சோழர் காலத்து பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் சுவர்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், பக்தர்களை வெகுவாக கவர்கின்றன. மூலஸ்தானத்தில் உள்ள 3.25 அடி உயரமான சூரிய நாராயணர் விக்ரகம், பத்ரிநாத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. மிகவும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது; பார்க்க இரண்டு கண்கள் போதாது.

தினமும் பூஜைகள் நடக்கின்றன. ஞாயிற்று கிழமை சூரியனுக்கு உகந்தது என்பதால், மாநிலத்தின் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். ரதசப்தமி நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும். சூரிய பகவானுக்கு கிரகங்களின் தோஷங்களை போக்கும் சக்தி உள்ளது. எனவே இந்த கோவிலுக்கு வந்து, தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர். கடன் தொல்லை நீங்கும். வாழ்க்கையில் பிரச்னைகள் விலகி, மகிழ்ச்சி பூக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாகும். கோவிலை பற்றி கேள்விப்பட்டு, வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

எப்படி செல்வது?

மெஜஸ்டிக்கில் இருந்து 8 கி.மீ., மல்லேஸ்வரத்தில் இருந்து 11 கி.மீ., யஷ்வந்த்பூரில் இருந்து, 12 கி.மீ., சிவாஜிநகரில் இருந்து 6 கி.மீ., இந்திராநகரில் இருந்து 2 கி.மீ., தொலைவில் தொம்மலுார் உள்ளது. பெங்களூரின் அனைத்து இடங்களில் இருந்தும், தொம்மலுாருக்கு பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்கள், வாடகை வாகனங்கள் வசதியும் உள்ளது. எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும், வாடகை கார், ஆட்டோவில் சூரிய நாராயண சுவாமி கோவிலுக்கு செல்லலாம்.

* தரிசன நேரம்: காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

* அருகில் உள்ள கோவில்கள்: வெங்கடேஸ்வரா கோவில், சோமேஸ்வரர் கோவில், சொக்கநாத சுவாமி கோவில், நாகவள்ளி கோவில், ஷீரடி சாய்பாபா கோவில்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 
temple news
* எப்போதும் கடவுளின் பெயரைச் சொல். நிம்மதியாக வாழலாம்.  * அறிவுரை சொல்லும் முன் உனக்கு அந்த தகுதி ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகா மகாலிதுர்கா கிராமத்தில், மகாலிதுர்கா மலை உள்ளது. கடல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar