Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 50 நிமிடங்கள் சூரிய கதிர்களின் ... தோஷங்களை போக்கும் தொம்மலுார் சூரிய நாராயணர் தோஷங்களை போக்கும் தொம்மலுார் சூரிய ...
முதல் பக்கம் » துளிகள்
3664 அடி உயரத்தில் மல்லேஸ்வரா சுவாமி கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
3664 அடி உயரத்தில் மல்லேஸ்வரா சுவாமி கோவில்

பதிவு செய்த நாள்

06 அக்
2026
01:10

பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகா மகாலிதுர்கா கிராமத்தில், மகாலிதுர்கா மலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,664 அடி உயரத்தில் உள்ள இந்த மலையின் உச்சியின் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மல்லேஸ்வரா சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலின் ஆன்மிக வரலாறு பல ஆண்டுகள் பழமையானது. ஹிந்து புராணங்களின்படி, மார்க்கண்டேய முனிவர் இந்த மலையின் அமைதியான சூழலால் ஈர்க்கப்பட்டு, இங்கு தீவிர தவம் செய்துள்ளார்.

அவரது தவத்தால் மெச்சிய சிவபெருமான் இங்கு மல்லேஸ்வரராக அதாவது சுயம்பு வடிவ லிங்கமாக காட்சி தந்து அருள்பாலித்தார் என்று நம்பப்படுகிறது.

மலையின் உச்சியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்த அதிர்வுகள் இன்னும் நிலவுகிறது என்றும், வாழ்க்கையில் ஏற்படும் கடுமையான தோஷங்கள் நீங்கவும், நீண்ட ஆயுள் பெறவும் மல்லேஸ்வரரை வழிபடுவது உகந்தது என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

இக்கோவில் மிகவும் எளிமையாக உள்ளது. விஜயநகர பேரரசர் காலத்து கட்டட கலையை கொண்டது. கருவறையில் பழமையான சிவலிங்கம் உள்ளது. கோவிலுக்கு அருகிலேயே பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட இயற்கையான குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீரை கொண்டே, மல்லேஸ்வரருக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.

மலையின் அடிவாரத்தில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. பக்தர்கள் முதலில் கிருஷ்ணரை வணங்கி விட்டே மலையேற துவங்குகின்றனர்.

வயதானவர்கள் மலை ஏற முடியாது என்பதால் அடிவாரத்தில் இருந்தே உச்சியில் உள்ள கோவிலை தரிசிக்கலாம். மலையேறி செல்வோர் உச்சியை அடைய இரண்டு மணி நேரம் ஆகலாம். சொந்த வாகனத்தில் செல்வோர், அடிவார பகுதியில் நிறுத்தி செல்லலாம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
இந்தியாவில் சூரிய பகவானுக்கு சில இடங்களில் மட்டுமே கோவில் உள்ளது. இதில் பெங்களூரு தொம்மலுாரில் உள்ள ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் புராதன கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலும் தனித்தனி சிறப்புகள் ... மேலும்
 
temple news
விஷ்ணுபதி புண்ணிய காலமான இன்று படித்தால் நன்மை பெருகும்.ஓம் அன்பின் சுடரே போற்றிஓம் அளவிலா அறமே ... மேலும்
 
temple news
* எல்லாம் நன்மைக்கே. எதைக் கண்டும் கலங்காதே.  * நிம்மதியைத் தேடி அலையாதே. அது உன் மனதில்தான் உள்ளது. * ... மேலும்
 
temple news
* வீணாக பேசாதே. கடவுளின் பெயரைச் சொல்.  * மனிதனின் பிறவி குணம் எப்போதும் மாறாது.  * தர்மத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar