Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆகம கோவில்களை வகைப்படுத்த வழிகாட்டுதல் வெளியிட கோரிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆகம கோவில்களை வகைப்படுத்த வழிகாட்டுதல் வெளியிட கோரிக்கை

பதிவு செய்த நாள்

06 அக்
2026
11:10

சென்னை: ‘‘தற்போது எதற்காக, ஆகம கோவில் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. ஆகம கோவில்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படும் என்பதற்கான வழிகாட்டுதல்களை, தமிழக அரசு வெளியிட வேண்டும்,’’ என, சைவ சித்தாந்த பெருமன்ற தலைவர் நல்லுார் சா.சரவணன் தெரிவித்தார்.


சென்னையில், அவர் அளித்த பேட்டி: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், ஓய்வுபெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில், ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவின்படி வரலாறு, கல்வெட்டியல், கட்டடக்கலை உள்ளிட்ட பல்துறை சார்ந்த வல்லுநர் குழு அமைக்கப்படவில்லை.


இக்குழு ஒவ்வொரு கோவிலுக்கும், நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளவில்லை. கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பூஜாரிகளிடம் பெறப்பட்ட ஒற்றை பக்க கடிதத்தில், ‘இக்கோவில் காமிக, காரண ஆகமப்படி இயங்குகிறது’ என, தன்னிச்சையாக ஒரு வரியில் எழுதிக் கொடுத்ததை, எவ்வித கேள்வியோ, ஆய்வோ செய்யாமல், இப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.


அறநிலையத்துறை வெளியிட்டுள்ள ஆகம கோவில் பட்டியலில், விபரீதங்களும், அப்பட்டமான ஆகம மீறல்களும் உள்ளன. காமிக ஆகமத்தின் தந்திராவதார படலம், வசனம் 106, 107ல் ஒரு கோவிலில் பல ஆகமங்களை கலப்பது குற்றம் என்கிறது. தற்போது எதற்காக இந்த ஆகம கோவில் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இதன் நோக்கம் என்ன; ஆகம கோவில்களை எவ்வாறு வகைப்படுத்துவது என்பதற்கான வழிகாட்டுதல்களை, உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.


தற்போது உள்ள ஆகம நிபுணர்கள் குழுவிற்கு பதில், ‘வரலாறு, கல்வெட்டியல், சிற்பக்கலை, கோவில் கட்டடக்கலை, ஆகம நிபுணர்கள் மற்றும் சைவ தத்துவ அறிஞர்கள் அடங்கிய, பல்துறை நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். தற்போது ஆகம கோவில் என வகைப்படுத்தப்பட்ட, 7,461 கோவில் பட்டியலை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar