Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ... குருக்கள் பற்றாக்குறை:  மூடி கிடக்கும் ராமேஸ்வரம் கோயில் சன்னதிகள்! குருக்கள் பற்றாக்குறை: மூடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமா...ராமா...கோஷம் முழங்க அயோத்தியாப்பட்டணம் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2013
10:02

சேலம்: அயோத்தியாப்பட்டணம், கோதண்டராமசாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. கலசங்களுக்கு அபிஷேகம் செய்த புண்ணிய தீர்த்தங்கள், நனைத்ததில் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். அயோத்தியாப்பட்டணத்தில், 500 ஆண்டு பழமை வாய்ந்த கோதண்டராமசாமி கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, அயோத்தியாப்பட்டணம், மேட்டுப்பட்டி, தாதனூர், காரிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், காலை, 6 மணியில் இருந்தே கோவிலுக்கு வர துவங்கினர். அதிகாலை, 5 மணியில் இருந்து காலை, 8.30 மணிவரை, யாகசாலை பிரதான ஆச்சார்யர்கள் சுதர்சன பட்டாச்சார்யா, ராஜா பட்டாச்சாரியார் ஆகியோரது தலைமையில், 35, ஆச்சார்யார்கள், புண்ணியாஹம், அக்னிப்பிரணயம், நித்யஹோமம், இதிகாச, புராண பிரபந்த சாற்று முறை, யாத்ராதானம் செய்தனர். காலை, 8.30 மணிக்கு, கோவில் ராஜகோபுரத்தில் உள்ள ஐந்து கலசங்களுக்கும், யமுனை, கங்கை, கோதாவரி, கிருஷ்ணா ராமேஸ்வரம், திவ்யதேச புஷ்பரகரணி, சாமிபுஷ்பகரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களால் கலசங்களுக்கு சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது. காலை, 9.10 மணிக்கு ராஜகோபுரம், மூலவர் கோபுரம், சக்கரத்தாழ்வார் கோபுர கலசம், கருடாழ்வார் கோபுர கலசம் , ஆஞ்சநேயர் கோபுர கலசம், முன்மண்டப கோபுர கலசம் ஆகியவற்றுக்கு, ஒரே நேரத்தில், கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் உட்பிரகாரத்திலும், வெளியிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ராம கோஷத்தை எழுப்பி உற்சாகம் அடைந்தனர். கும்பாபிஷேகம் முடிந்ததும், கலசங்களுக்கு அர்ச்சனை செய்ய அரளி பூக்கள், ஒவ்வொரு பிரகாரத்தில் இருந்தும் பக்தர்களை நோக்கி வீசப்பட்டது. ராஜகோபுரத்தில் இருந்து புண்ணிய தீர்த்தங்கள், தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன், மேலே இருந்து, கோவிலின் உள் மற்றும் வெளிப்பிரகாரம் உள்ளிட்ட நான்கு திசைகளில் நின்றிருந்த பக்தர்களை நோக்கி, 15 நிமிடம் பீய்ச்சி அடிக்கப்பட்டது. பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் புண்ணிய தீர்த்தத்தில் நனைந்து, பரசவம் அடைந்தனர்.

கும்பாபிஷேகம் முடிந்தவுடன், மூலவருக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆகியேருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட கியூவரிசையில் நின்று ஸ்ரீராமனை வணங்கி சென்றனர். கும்பாபிஷேகம் முடிந்த பிறகும், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்திருந்தனர். காரிப்பட்டி போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

*புண்ணிய தீர்த்தங்களை, தங்கள் மீது தொடர்ந்து பீய்ச்சி அடிக்கும்படி, தீயணைப்பு படை வீரர்களிடம் பக்தர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர்.
*கும்பாபிஷேகம் முடிந்த, பட்டாச்சாரியார்கள் கீழே எடுத்த வந்த கலசங்களில் இருந்த தீர்த்தத்தை பெறுவதற்கு, பக்தர்கள் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
*காலை 7 மணி முதல், மைக் மூலம், ஸ்ரீராமனின் வரலாறு, அயோத்தியாப்பட்டணத்தில், ராமர் கோவில் உருவான வரலாறு ஆகியவற்றை, பட்டாச்சாரியார்கள் வாசித்த வண்ணம் இருந்தனர்.
*கோவில் நுழைவு வாயிலில் தடுப்பு வேலி உள்ளிட்ட வசதிகள், முறையாக ஏற்படுத்தப்படாததால், பக்தர்களுக்கு இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
*கோவிலுக்கு வெளியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸார், ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருந்தனர்.
* பக்தர்கள் திரண்டதால், அயோத்தியாப்பட்டணம் ரயில்வே கேட்டில் இருந்தே, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
*கண்காணிப்பு காமிரா மூலம், கோவிலின் அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar